தலையில் கிரீடம்.. போட்டோ நெகட்டிவ்.. கிரேஸித்தனத்தின் உச்சம்.. சூனியக்காரியாக மாறிய ஸ்ருதிஹாசன்!

சென்னை: திடீர்னு புலி பட ஸ்ரீதேவி மாதிரி சூனியக்காரி போல தலையில் கிரீடத்தை எல்லாம் வைத்துக் கொண்டு போட்டோ நெகட்டிவ்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை பயமுறுத்தி வருகிறார் ஸ்ருதிஹாசன்.

தனது புதிய பாய் பெஸ்டீ சாந்தனு ஹசாரிகாவுடன் இந்த லாக்டவுனை ஒன்றாக கழித்து வருவதாக சமீபத்தில் பதிவிட்டு இருந்தார் நடிகை ஸ்ருதிஹாசன்.

இந்நிலையில், தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட பதிவுகளை போட்டு இணையத்தை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.

காதலருடன் லாக்ட் டவுன்

காதலருடன் லாக்ட் டவுன்

கொரோனா பரவல் காரணமாக மீண்டும் முழு ஊரடங்கு போடப்பட்டிருக்கும் நிலையில், இலுஸ்டிரேட் ஆர்ட்டிஸ்ட் சாந்தனு ஹசாரிகாவுடன் லாக்ட் டவுன் ஆகி உள்ளதாக சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கினார்.

அப்பா அம்மா பற்றி

அப்பா அம்மா பற்றி

உலகநாயகன் கமல்ஹாசன் சரிகா தம்பதியினரின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன். சமீபத்தில் தனது அப்பா மற்றும் அம்மா விவாகரத்து செய்து பிரிந்து கொண்டது சரியான முடிவு தான் என்றும் இருவரும் தங்களுக்கு பிடித்தமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் என்றும் கூறி பரபரப்பை கிளப்பி இருந்தார்.

தலையில் கிரீடம்

தலையில் கிரீடம்

லாக்டவுன் என்பதால் பிரபாஸ் உடன் நடித்து வந்த சலார் படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சமூக வலைதளத்தில் ரொம்பவே ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் ஸ்ருதிஹாசன். ரீசன்ட்டாக தலையில் கிரீடம் வைத்த படி வித்தியாசமான போட்டோக்களை போட்டு டிரெண்ட் செய்து வருகிறார்.

சூனியக்காரி

சூனியக்காரி

நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பிலும் இசையிலும் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். மேலும் அவர் மிகவும் கிரேஸியானவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், தற்போது தனது கிரேஸி தனத்தின் உச்சத்தை எட்டி உள்ளார். கிரீடம் வைத்த புகைப்படங்களை பதிவிட்ட அவர் (Witch) சூனியக்காரி என கேப்ஷன் கொடுத்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.

அய்யோ பேய்

அய்யோ பேய்

அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் அந்த போட்டோவின் நெகட்டிவ் இமேஜ் போல போட்டோஷாப் செய்யப்பட்ட போட்டோக்களை பதிவிட்டு நிஜமாகவே பேய் போலவே காட்சியளித்து ரசிகர்களை பயமுறுத்தி வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன். அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பல பிரபலங்களும் அதனை லைக் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

என்ன ஆச்சு

என்ன ஆச்சு

ஏன் இப்படி திடீர்னு போட்டோ நெகட்டிவ் எல்லாம் போட்டு பதற வைக்கிறார் ஸ்ருதிஹாசன், அவருக்கு என்ன ஆச்சு என்று ரசிகர்களும் சில பிரபலங்களும் கமெண்ட் செக்‌ஷனில் கேள்விகளை எழுப்பி கலாய்த்து வருகின்றனர். ஸ்ருதிஹாசனின் இந்த வித்தியாசமான போஸ்ட்டுகளுக்கு லட்சக் கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X