அப்பாவ போல பொண்ணு.. உலக நாயகி ஆகும் ஸ்ருதிஹாசன்?
அமெரிக்க வெப் தொடரான டிரெட்ஸ்டோனில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் ஹாலிவுட்டில் கால் பதித்துள்ளார்.
Recommended Video
லாஸ் ஏஞ்சல்ஸ்: காதல் பிரிவுக்கு பிறகு சினிமா பக்கம் மொத்த கவனத்தையும் நடிகை ஸ்ருதிஹாசன் திருப்பியுள்ளார்.
விஜய்சேதுபதியுடன் லாபம், விஜய்யின் தெறி படத்தின் தெலுங்கு ரீமேக் என அடுத்தடுத்து பல படங்களில் கமீட் ஆகி வரும் நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது ஹாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.
டிரெட்ஸ்டோன் எனும் அமெரிக்க வெப் தொடரில் சிறப்பு தோற்றத்தில் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.

தந்தையை போல
நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் 60 ஆண்டுகளை நிறைவு செய்து மிகப்பெரிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். தந்தையை போல பன்முக திறமை கொண்ட மகளாக விளங்கி வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன்.
பாடகியாக அறிமுகமான ஸ்ருதிஹாசன், 2000-ஆம் ஆண்டு வெளியான ஹேராம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர், 2009ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான லக்கி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ஸ்ருதிஹாசன், சூர்யாவின் 7ம் அறிவு படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார்.

பிரேக்கப்
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வந்த ஸ்ருதிஹாசன், கொஞ்ச நாட்கள் தனது இத்தாலிய பாய் ஃபிரெண்ட் மைக்கேல் கார்சலேவுடன் வலம் வந்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகின்றனர் என்ற செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்த நிலையில், திடீரென நடிகை ஸ்ருதிஹாசன் தனது காதலனுடன் பிரேக்கப் செய்து கொண்டார்.

மீண்டும் சினிமா
காதல் வலையில் சிக்கியிருந்த நடிகை ஸ்ருதிஹாசன், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சினிமாவுக்கு முழுக்கு போட்டிருந்தார். காதல் பிரிவுக்கு பிறகு, தற்போது மீண்டும் சினிமாவில் தான் விட்ட இடத்தை பிடிக்க தொடர்ந்து போராடி வருகிறார்.
எஸ்.பி. ஜெகநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் திரைப்படத்தில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன், அடுத்ததாக தெலுங்கில் ரவிதேஜா நடிப்பில் உருவாகும் தெறி ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.

உலக நாயகி
சினிமா உலகிற்குள் மீண்டும் கவனம் செலுத்தி வரும் ஸ்ருதிஹாசன், கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட்களை கடந்து தற்போது ஹாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். மேட் டாமன் நடிப்பில் வெளியான ஜேசன் பார்ன் படத்தை மையமாக வைத்து அமெரிக்காவில் எடுக்கப்பட்டு வரும் TreadStone வெப் தொடரில் நிரா பட்டேல் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











