குட்டி ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டு கும்மாங்குத்து குத்தும் ஸ்ருதிஹாசன்.. சார்பட்டா 2 வாய்ப்பு இருக்கா?
சென்னை: நடிகை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்ஸிங் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
இந்த ஆண்டு நடிகை ஸ்ருதிஹாசன் சீனியர் நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இரண்டு படங்களும் வெளியாகி வசூல் ரீதியாக நல்ல கலெக்ஷனை அள்ளின.
அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

பூனைக்குட்டியாக
நடிகை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட கவர்ச்சி வீடியோக்களையும் போட்டோக்களையும் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் பூனைக்குட்டி போல ஹேர்ஸ்டைல் செய்து கொண்டு சோபாவில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி இருந்தார்.

பாலகிருஷ்ணா ஜோடி
தெலுங்கில் இந்த ஆண்டு சங்கராந்தியை முன்னிட்டு வெளியான நந்தமுரி பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். ஹனி ரோஸ் மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த அந்த படத்தில் செம ஸ்டெப் போட்டு ஆட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்திருந்தார் ஸ்ருதிஹாசன்.

சீனியர் நடிகர்களுக்கு ஜோடி
சூர்யா, விஜய்சேதுபதி, தனுஷ், அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த ஸ்ருதிஹாசன் சமீப காலமாக சீனியர் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தது ஏகப்பட்ட ட்ரோல்களுக்கு வழி வகுத்தது. பாலய்யாவை தொடர்ந்து சிரஞ்சீவிக்கும் ஜோடியாக வால்டர் வீரய்யா படத்தில் நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன்.

பாக்ஸிங் வீடியோ
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடுமையாக பாக்ஸிங் செய்யும் வீடியோ ஒன்றையும் செம ஃபன்னான கேப்ஷன் உடன் பதிவிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன். அந்த வீடியோவில் ஸ்ருதிஹாசன் செய்யும் சேட்டைகளும் ரசிகர்களை கவரும் விதத்தில் செம காமெடியாக உள்ளதாக கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
கும்மாங்குத்து
என்ன ஸ்ருதிஹாசன் இப்படி கும்மாங்குத்து குத்துறாரே பாவம் அந்த ட்ரெய்னர் என ரசிகர்கள் ஸ்ருதிஹாசனின் பாக்ஸிங் வீடியோவை பார்த்து ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர். ஸ்ருதிஹாசனின் சேட்டைகளையும் ரசிகர்கள் அந்த வீடியோவில் ரசித்து வருகின்றனர்.

சார்பட்டா 2வில் நடிக்கிறீங்களா
சமீபத்தில் சார்பட்டா 2 படம் லோடிங் என அறிவிப்பு வந்த நிலையில், ஸ்ருதிஹாசன் திடீரென பாக்ஸிங் செய்யும் வீடியோ வெளியிட்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள் அடுத்ததாக சார்பட்டா 2 படத்தில் நடிக்கப் போறீங்களா என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். பிரபாஸின் சலார் படம் வெளியானால் ஸ்ருதிஹாசனின் மார்க்கெட் வேறலெவலில் சென்று விடும் என ரசிகர்கள் அந்த படத்துக்காக காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











