இதெப்படி இருக்கு? நடிகை ஸ்ருதிஹாசன் உருவாக்கிய பட்டன் மாஸ்க்.. வேற லெவல் என புகழும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை ஸ்ருதிஹாசன் உருவாக்கியுள்ள பட்டன் மாஸ்க் ஸ்டைலிஷாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் மிகப்பெரும் சவாலாக உருவாகி இருக்கிறது. இதை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடுமையான முயற்சி செய்து வருகின்றன.
இந்த வைரஸுக்கு ஏழைகள் முதல் கோடீஸ்வரர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

வேகமாக பரவுகிறது
இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவிலும் இந்தத் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 39 லட்சத்து 36 ஆயிரத்து 747 ஆக உயர்ந்து இருக்கிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 68,472 ஆக அதிகரித்துள்ளது.

முகக்கவசம்
கொரோனாவில் இருந்து தப்பிக்க அனைவரும் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. கட்டாயம் என்பதால் அனைவரும் முகக்கவசம் அணிந்தே வெளியே சென்று வருகின்றனர். விதவிதமான வடிவங்களில், வண்ணங்களில், முகக்கவசங்கள் வெளிவந்துள்ளன. அவரவர் தகுதிக்கு ஏற்பவும் விற்கப்பட்டு வருகின்றன.

பட்டன் மாஸ்க்
இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன், தானே புதுவிதமான முகக்கவசத்தை வடிவமைத்துள்ளார். அதில் வண்ணமயமான சிறுதும் பெரிதுமான சட்டைப் பட்டன்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்டைலிஷாக இருக்கும் அந்தப் பட்டன் மாஸ்க் பற்றி அவர், தனது சமூக வலைதளத்தில் விளக்க வீடியோ ஒன்றும் வெளியிட்டுள்ளார்.

விஜய்சேதுபதி
'நான் பாடுவதற்காக, பட்டன் முகக்கவசத்தை அணிந்து செல்கிறேன். நீங்களும் அதை விரும்புகிறீர்களா? மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் ஸ்ருதி. இதையடுத்து இந்த மாஸ்க் ஸ்டைலாக இருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். ஸ்ருதிஹாசன், தமிழில் எஸ்.பி ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தில் விஜய்சேதுபதியுடன் நடித்து வருகிறார். தெலுங்கில் 2 படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











