என்னது எனக்கு திருமணம் ஆகிடுச்சா...வைரலாகும் ஸ்ருதிஹாசனின் பதிலடி வீடியோ

சென்னை : நடிகர் கமலின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தென்னிந்திய திரையுலகில் பிஸியான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தெலுங்கில் இவர் நடித்த கிராக் படம் சமீபத்தில் ரிலீசாகி சூப்பர்ஹிட்டானது.

பவன் கல்யாண் நடித்த வக்கீல் சாப் படத்திலும் ஸ்ருதிஹாசன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த லாபம் படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தில் யாழா யாழா படம் வெளியிடப்பட்டு வைரலானது.

தற்போதைய லாக்டவுன் சமயத்தில் தனது காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் பொழுதை கழித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அத்துடன் சமூக வலைதளங்களில் தன்னை பின் தொடர்பவர்களிடமும் வீடியோ மூலம் கலந்துரையாடி, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் பரவிய தகவல்

சமூக வலைதளங்களில் பரவிய தகவல்

இதற்கிடையில் ஸ்ருதிஹாசனுக்கு திருமணம் ஆகிய விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது தொடர்பாக ரசிகர்கள் பலரும் ஸ்ருதிஹாசனிடம் நேரடியாக கேள்வி கேட்டுள்ளனர். இதற்கு ஸ்ருதி மிகத் தெளிவாக பதிலளித்துள்ளார்.

Recommended Video

Shruthi Hassan பயங்கர Makeup! Black Dark Lens Look | Shruthi Hassan With Boyfriend
எனக்கு திருமணமாகிடுச்சா

எனக்கு திருமணமாகிடுச்சா

அதற்கு பதிலளித்த ஸ்ருதி, இல்லை எனக்கு திருமணம் ஆகவில்லை என தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, நீங்கள் தமிழில் பேசுகிறீர்கள். ஆனால் உங்கள் அப்பா கமலிடம் இருக்கும் சரளமான பேச்சு உங்களுக்கு வரவில்லையே என சிலர் கேள்வி கேட்டுள்ளார்.

வைரலாகும் வீடியோ

இது போன்ற பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு ஸ்ருதிஹாசன் பதிலளித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அடுக்கடுக்கான கேள்விகளுக்கு ஸ்ருதிஹாசன் அழகாகவும், வெளிப்படையாகவும் பதிலளித்துள்ளதை பலரும் பாராட்டி உள்ளனர்.

லாக்டவுன் முடிய காத்திருக்கும் ஸ்ருதி

லாக்டவுன் முடிய காத்திருக்கும் ஸ்ருதி

லாக்டவுன் முடிந்த பிறகு மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் சாலர் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார். இந்த படத்தில் பான் இந்தியன் சூப்பர் ஸ்டாராக இருக்கும் பிரபாசுக்கு ஜோடியாக ஸ்ருதி நடிக்க உள்ளார். கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் 2 படங்களை இயக்கிய பிரஷாந்த் நீல் தான் இந்த படத்தை இயக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X