என் குழந்தைகளை நான் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்: ஃபீலிங்கில் ஸ்ருதி ஹாஸன்
Recommended Video
சென்னை: தன் குழந்தைகளை மிகவும் மிஸ் பண்ணுவதாக ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார்.
ஸ்ருதி ஹாஸனும், காதலர் மைக்கேல் கார்சேலும் பிரிந்துவிட்டனர். இதை மைக்கேல் ட்வீட் செய்த பிறகு தான் அனைவருக்கும் தெரியும். ஸ்ருதி தற்போது விஜய் சேதுபதியின் லாபம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
முதல் கட்ட படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டு தன் பகுதியை நடித்து முடித்துவிட்டார்.
ஸ்ருதி
முதல் கட்ட படப்பிடிப்பு நல்லபடியாக நடந்து முடிந்ததாக ஸ்ருதி ஹாஸன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பேபி
ஸ்ருதி ஹாஸன் கிளாரா, கோரா என்று இரண்டு பூனைகளை தன் பிள்ளைகள் போன்று வளர்க்கிறார். அந்த பிள்ளைகளை தான் ரொம்ப மிஸ் பண்ணுகிறாராம்.

மைக்கேல்
மைக்கேல் கார்சேலை காதலித்தபோதும் அதை ஸ்ருதி ஹாஸன் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. என் பெர்சனல் வாழ்க்கை பற்றி நான் பேச மாட்டேன் என்பார். தற்போதும் அப்படித் தான் உள்ளார். அவர் சொல்வதும் நியாயம் தானே.

நடிப்பு
காதல் முறிந்துவிட்டதே என்று வீட்டில் உட்கார்ந்து கவலைப்படாமல் பட வேலைகளில் கவனம் செலுத்துகிறார். ஸ்ருதி ஹாஸன் சுமார்
2 ஆண்டுகள் கழித்து நடிக்க வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











