திஷா கால்ஷீட் பிரச்னை.. பிரபல ஹீரோ ஜோடியான ஸ்ருதி ஹாசன்.. பிறந்த நாளில் ஜில் அறிவிப்பு

By

சென்னை: சலார் படத்தின் ஹீரோயினாக நடிகை ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

கன்னடத்தில் உருவான, 'கே.ஜி.எஃப்' படம், தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

அனைத்து மொழிகளிலும் படம் வரவேற்பை பெற்றதை அடுத்து, இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

ஶ்ரீனிதி ஷெட்டி

ஶ்ரீனிதி ஷெட்டி

முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல், 'கே.ஜி.எஃப்: சாப்டர் 2' என்ற அதன் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த யஷ், ஶ்ரீனிதி ஷெட்டி ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற கேரக்டரில் வில்லனாக நடிக்கிறார். ரவீனா டாண்டன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு

இறுதிக்கட்ட படப்பிடிப்பு

இந்த வருடத்தின் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் படங்களில் ஒன்றாக இது இருக்கிறது. இதை கொரோனா காரணமாக திட்டமிட்டபடி முடிக்க முடியவில்லை. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்ட பிறகு இதன் ஷூட்டிங், அக்டோபர் மாதம் மீண்டும் தொடங்கியது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது.

ஹொம்பாளே பிலிம்ஸ்

ஹொம்பாளே பிலிம்ஸ்

இந்தப் படத்தை அடுத்து இதன் இயக்குனர் பிரசாந்த் நீல், பிரபாஸ் நடிக்கும் சலார் என்ற படத்தை இயக்குகிறார். இதன் தொடக்க விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை, கே.ஜி.எஃப் பட தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாளே பிலிம்ஸ் தயாரிக்கிறது.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இந்தப் படத்தில் பிரபல இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இப்போது விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இதில் ஹீரோயினாக, ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கால்ஷீட் சிக்கல்

கால்ஷீட் சிக்கல்

முதலில் இந்தி நடிகை திஷா படானியிடம் படக்குழு பேசி வந்தனர். அவர் கால்ஷீட் கிடைப்பதில் சிக்கல் இருந்ததால், அவரால் இதில் நடிக்க முடியவில்லை. இதையடுத்து ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஸ்ருதியின் பிறந்த நாளான இன்று, படக்குழு இதை அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X