ட்ரேட்ஸ்டோன் டிவி சீரியல்... சிஐஏ அதிகாரியாக நடிக்கும் ஸ்ருதி ஹாசன்
சென்னை: நடிகை ஸ்ருதி ஹாசன் டிரேட்ஸ்டோன் என்கிற அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஸ்ருதிஹாசன் ஒரு இளம் பெண்ணான நிரா படேல் என்ற கதாபாத்திரத்தில் சி.ஐ.ஏ அதிகாரியாக நடித்துள்ளார். இதற்காக அவர் சண்டைப் பயிற்சியும் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகைகள் தற்போது சினிமாவில் நடிப்பதை விட, வெப் சீரிஸில் நடிப்பதற்கு அதிக ஆர்வமாக உள்ளனர். முன்னதாக தமிழ் நடிகைகளில் மீனா லைகா தயாரிக்கும் வெப் சீரிஸில் நடிக்கத் ஆரம்பித்தார். அடுத்ததாக சுனைனா ஃபிங்கர்டிப் வெப் சீரிஸில் நடிக்க தொடங்கிவிட்டார்.

அடுத்ததாக நடிகை ப்ரியாமணி இந்தி வெப் சீரிஸில் நடித்து வருகிறார். அதேபோல் நடிகை அக்ஷரா ஹாசனும் வெப் சீரிஸில் நடித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து அவருடைய சகோதரி நடிகை ஸ்ருதி ஹாசனும் தொலைக்காட்சி தொடரில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஸ்ருதிஹாசன் பாடகராக இருந்து நடிகை அவதாரம் எடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். இவர் பல படங்களில் பாடல்களும் பாடியுள்ளார் அதுமட்டுமின்றி இவர் சில திரைப்படங்களுக்கு இசை கூட அமைத்துள்ளார். இவர் தெலுங்கு திரைத்துறையில் பல படங்கள் நடித்து வரும் சமயத்தில் தமிழ் திரைத்துறையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
7ஆம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ருதி ஹாசன். அதன் பிறகு தெலுங்கு, தமிழ் போன்ற பல படங்களில் நடித்து வந்தர். இவர் இந்தி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது டிரேட்ஸ்டோன் என்கிற அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஸ்ருதி ஒரு இளம் பெண்ணான நிரா படேல் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் இந்த தொடரில் சி.ஐ.ஏ அதிகாரியாக நடித்துள்ளார்.

மேலும் இத்தொடரில் சண்டை காட்சிகள் அதிகம் உள்ளது என்பதால், சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்காகவே சிறப்பு பயிற்சிகளை ஸ்ருதி மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது இந்த தொடரின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இந்த தொடர் அக்டோபர் 15ஆம் தேதியன்று முதலாவது எபிசோட் தி சிக்காடா ப்ரோடோகால் (The Cicada Protocol) என்ற பெயரிலும் அக்டோபர் 22ஆம் தேதி இரண்டாவது எபிசோட் தி கவ்ன் கான்ஸ்பிரசி (The Kwon Conspiracy) என்ற பெயரிலும் வெளியாக உள்ளது.
ஸ்ருதிஹாசன் தற்போது தமிழில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் லாபம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











