ஸ்ருதி ஹாஸன் கமல் மகளாச்சே: இப்படித் தான் இருப்பார்

By Siva

சென்னை: ஸ்ருதி ஹாஸன் போட்ட ட்வீட்டை பார்ப்பவர்கள் கமல் பொண்ணாச்சே, இப்படித் தான் இருப்பார் என்கிறார்கள்.

ஸ்ருதி ஹாஸன் லண்டனை சேர்ந்த நாடக கலைஞரான மைக்கேல் கார்சேலை மனதார காதலித்தார். மைக்கேல் லண்டனில் வசித்ததால் அடிக்கடி அங்கு சென்று அவருடன் நேரம் செலவிட்டார். மைக்கேலும் அடிக்கடி இந்தியா வந்தார்.

இருப்பினும் ஆளுக்கு ஒரு இடத்தில் இருப்பதால் இது சரிபட்டு வரவில்லை, அதனால் இனி காதலர்களாக அல்ல நல்ல நண்பர்களாக மட்டும் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று மைக்கேல் சமூக வலைதளத்தில் அறிவித்தார்.

ஸ்ருதி ஹாஸன்

ஸ்ருதி ஹாஸன்

காதல் முறிவு குறித்து ஸ்ருதி ஹாஸன் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. மைக்கேலை காதலித்தபோது படங்களில் நடிக்காமல் இருந்த ஸ்ருதி ஹாஸன் தற்போது நடிப்பில் முழுக் கவனம் செலுத்தி வருகிறார். அது அவரின் ரசிகர்களுக்கு பெருமகிழ்ச்சி அளித்துள்ளது. ஸ்ருதிக்கு ஏற்றவர் இல்லை மைக்கேல் அதனால் அவர்கள் பிரிந்தது நல்லதே என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

திருமணம்

ஸ்ருதி ஹாஸன் தனது காதலரை பிரிந்தது தெரிந்தும் ரசிகர் ஒருவர், உங்களுக்கு எப்பொழுது திருமணம் என்று கூறுங்கள். உங்களின் திருமணத்திற்கு ரசிகர்கள் அனைவரும் வருவோம். தயவு செய்து உங்களின் திருமணத்திற்கு அழைப்பு விடுங்கள் என்று ட்வீட் போட்டார். ஸ்ருதி ட்விட்டரில் ரொம்பவே ஆக்டிவ். ரசிகர்கள் ஏதாவது கேள்வி கேட்டால் நிச்சயம் பதில் அளிப்பார். இந்நிலையில் இந்த ரசிகருக்கும் பதில் அளித்துள்ளார்.

பிறந்தநாள்

திருமணம் எப்பொழுது என்று கேட்ட ரசிகருக்கு ஸ்ருதி அளித்த பதிலில் கூறியிருப்பதாவது, அதற்கு நீங்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். அதனால் நாம் அனைவரும் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடலாமே என்று தெரிவித்துள்ளார்.

கமல் மகள்

கமல் மகள்

ஸ்ருதி ஹாஸனின் பதிலை பார்த்த நெட்டிசன்கள் கமல் மகளாச்சே இப்படித் தான் பதில் அளிப்பார். அப்பா போன்றே மகளும் அறிவாளியாக உள்ளார். ரசிகருக்கும் பதில் அளிக்க வேண்டும், அதே சமயம் அவரின் மனமும் புண்படாமல் இருக்க வேண்டும் என்று நினைத்து அழகாக பதில் அளித்துள்ளார் என்கிறார்கள் நெட்டிசன்கள். ஸ்ருதியின் புத்திசாலித்தனத்தை பாராட்டினாலும் அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் அன்புக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X