நாங்க எல்லாரும் லூசுதான்.. கமல்ஹாசனை விட தக் லைஃப் டைட்டிலுக்கு ஸ்ருதிஹாசன் கச்சிதமா இருக்காரே!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக்கி அவருக்கு ஜோடியாக ரொமான்ஸ் செய்து நடித்துள்ள ஸ்ருதிஹாசன் 'இனிமேல்' பாடலின் புரமோஷனுக்காக விஜே சித்து உடன் நடத்திய பேட்டியில் "நாங்க எல்லாம் லூசு தான்" என பேசியது சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தமிழில் சூர்யா நடித்து வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

Shruti Haasan real Thug Life moment in Vj Siddhu interview

விஜய்யுடன் புலி, அஜித்துடன் வேதாளம், சூர்யாவுடன் ஏழாம் அறிவு, சிங்கம் 3, தனுஷுடன் 3 என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

சலார்: தமிழில் கடைசியாக விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் படத்தில் நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். சமந்தாவை போல இவருக்கும் உடலில் சில பல உடல்நலக்குறைவுகள் ஏற்பட்ட நிலையில் சில ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்தார். மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ள ஸ்ருதிஹாசன் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்தில் நாயகியாக நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.

லோகேஷ் கனகராஜுடன் டூயட்: ராஜ் கமல் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் பாடியுள்ள 'இனிமேல்' பாடல் வீடியோவில் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக ஆக்சன் திரில்லர் படங்களை கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ் இப்படி ஒரு ரொமான்டிக் பாயா என ரசிகர்கள் ஷாக் ஆகினர். நேற்று வெளியான இனிமேல் பாடலை பார்த்த ரசிகர்கள் இந்த பாடலுக்கு லோகேஷ் கனகராஜ் சரியான தேர்வு என பதிவிட்டு வருகின்றனர். திருமண உறவில் இளைஞர்களிடையே ஏற்படும் கோபத்தை எல்லாம் அவர் கொட்டித் தீர்த்த விதம் நடிகராகவும் அவர் இனி தாராளமாக வலம் வரலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

விஜே சித்துவுடன் பேட்டி: 'இனிமேல்' பாடல் வீடியோவை பெரிதளவில் புரமோட் செய்ய நினைத்த ஸ்ருதிஹாசன் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்துள்ளார். விஜே சித்துவுடன் மொட்டை மாடி பார்ட்டியாக பேட்டி நடத்தாமல் எளிமையான முறையில் நடத்திய பேட்டியிலும் ஏகப்பட்ட ரகளையான சம்பவங்கள் நடந்துள்ளன.

நாங்க எல்லாம் லூசுதான்: அந்த பேட்டியின் முடிவில் விஜே சித்து நாங்க ஏதாவது லூசுத்தனமாக பேசியிருந்தால் மன்னிச்சுடுங்க என சொன்னதும், அதெல்லாம் ஒண்ணுமில்லை, நாங்க எல்லாம் லூசுதான் என லோகேஷ் கனகராஜையும் சேர்த்து சொன்னதை பார்த்த ரசிகர்கள் ஸ்ருதிஹாசனின் தக் லைஃப் பதில் என டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கிரிஞ்சு தப்பு இல்லை: கிரிஞ்சு, கிரிஞ்சுன்னு சொல்லி கிண்டல் செய்ய வேண்டாம். கிரிஞ்சா இருக்குறது அவங்களுக்கு ஹேப்பியா இருந்தா இருந்துட்டு போகட்டுமே என இன்னொரு பேட்டியிலும் தத்துவங்களை அடுக்கியிருக்கிறார் ஸ்ருதிஹாசன். ஸ்ருதிஹாசனின் பேட்டியை பார்த்தாலே தனி எனர்ஜி கிடைத்து விடும் என்றும் மன்டே மோட்டிவேஷன் இனிமேல் ஸ்ருதி பேட்டி தான் என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ரோலக்ஸ் அண்ணன் டீலக்ஸ்: விஜே சித்துவுடனான ஜாலியான பேட்டியில் லோகேஷ் கனகராஜ் ரோலக்ஸ் அண்ணன் டீலக்ஸ் ஆகவே நடிக்கலாம் என பேசி பங்கமாக கலாய்த்துள்ள வீடியோக்களையும் நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X