'நான் பெஸ்ட் டிரைவர் இல்லை..' உத்தராகண்ட் மலைப் பகுதியில் லாரி ஓட்டிய நடிகை ஸ்ருதி ஹாசன்!

By

சென்னை: டிஜிட்டல் படத்துக்காக லாரி ஓட்டியது வேடிக்கையான அனுபவம் என்று கூறியுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.

Recommended Video

வில்லி கேரக்டரில் நடிக்க ஆசைப்படும் வாரிசு நடிகை.. வரிசை கட்டும் இயக்குநர்கள்.. டாப் 5 பீட்ஸில்!

நடிகை ஸ்ருதிஹாசன் இப்போது, ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தில் நடித்து வருகிறார்.

இதில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்கிறார். தெலுங்கில், ரவிதேஜாவுடன் கிராக் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

 பிளாஸ்டிக் சர்ஜரி

பிளாஸ்டிக் சர்ஜரி

கொரோனா லாக்டவுன் காரணமாக, மும்பையில் உள்ள தனது வீட்டில் வசித்துவந்த நடிகை ஸ்ருதிஹாசன், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் தனது மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதை ஒப்புக்கொண்டார். அதைச் சொல்வதில் தனக்கு வெட்கம் இல்லை என்றும் நடிகை ஸ்ருதிஹாசன் கூறியிருந்தார்.

மன ஆரோக்கியம்

மன ஆரோக்கியம்

பின்னர் லாக்டவுன் காரணமாக, மக்களின் மன ஆரோக்கியம் கடுமையாகப் பாதிக்கப் பட்டிருக்கிறது என்று கூறினார். இப்போது இதுதான் மக்களின் உண்மையான பிரச்னை என்று கருதுகிறேன். நான் மூன்று வருடங்களாக இதற்கானச் சிகிச்சையில் இருக்கிறேன். மக்களுக்கும் அதை தீவிரமாகப் பரிந்துரைக்கிறேன் என்று கூறியிருந்தார்.

டிஜிட்டல் படம் யாத்ரா

டிஜிட்டல் படம் யாத்ரா

இந்நிலையில், அவர் டிஜிட்டல் படம் ஒன்றில் நடித்துவருகிறார். யாத்ரா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் வித்யூத் ஜாம்வால், அமித் சாத், விஜய் வர்மா, சஞ்சய் மிஸ்ரா உட்பட பலர் நடிக்கின்றனர். திக்மன்ஷு துலியா இயக்குகிறார். இது கேங் ஸ்டோரி என்ற பிரெஞ்ச் படத்தின் ரீமேக். இந்தப் படத்துக்காக நடிகை ஸ்ருதிஹாசன் லாரி ஓட்டியுள்ளார்.

உத்தராகண்ட் மலை

உத்தராகண்ட் மலை

இதுபற்றி அவர் கூறும்போது, நான் சிறப்பான டிரைவர் இல்லை. இருந்தாலும் எனக்கு ஸ்டன்ட் யூனிட்டைச் சேர்ந்தவர் உதவி செய்தார். அவர் மறைந்திருந்து கிளட்ச் மற்றும் கியரை மாற்ற உதவினார். அவரை நான் வாழ்த்துகிறேன். அது எளிதான விஷயம் அல்ல என்பது எனக்குப் புரிந்தது. உத்தராகண்ட் மலைப் பகுதியில் லாரி ஓட்டுவது என்பது கடினமான ஒன்று' என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X