காதலருக்கு பிறந்தநாள் வாழ்த்து...நெருக்கமான ஃபோட்டோக்களை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்

சென்னை : பாடகி, நடிகை என பல திறமைகளைக் கொண்ட ஸ்ருதிஹாசன், சமீபத்தில் தனது புதிய காதலரின் ஃபோட்டோவை வெளியிட்டார். காதலனுடன் ஸ்ருதி நெருக்கமாக இருக்கும் ஃபோட்டோக்கள் இணையத்தில் வைரலாகின.

Shruti Haasans adorable birthday wishes to her boyfriend

இந்நிலையில் ஸ்ருதியின் காதலர் சாந்தனு ஹசாரிகா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்கு வாழ்த்து தெரிவித்த ஸ்ருதி, காதலருடன் கட்டிபிடித்தபடி இருக்கும் ஃபோட்டோவை வெளியிட்டு, இளவரசருக்கு பிறந்தநாள் வாழ்த்து என குறிப்பிட்டுள்ளார்.

Shruti Haasans adorable birthday wishes to her boyfriend

எனக்கு பிடித்தமான நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டு சாந்தனுவின் பிறந்தநாள் ஃபோட்டோக்கள் ஸ்ருதி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். வித விதமாக முக பாவனைகளுடன், கட்டிப்பிடித்தபடி இருவருக்கும் இருக்கும் ஃபோட்டோக்களை தான் ஸ்ருதி பகிர்ந்துள்ளார். சாந்தனு ஹசாரிகா, கவுகார்த்தியை சேர்ந்த டூடுல் ஆர்டிஸ்ட் ஆவார்.

ஸ்ருதிஹாசன் தற்போது தமிழில் லாபம் மற்றும் தெலுங்கில் வக்கீல் சாப் படங்களில் நடித்து முடித்துள்ளார். அடுத்து பிரபாசுடன் சலார் படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் கமலின் பிரச்சாரத்திற்கு அவருக்கு உதவியாக ஸ்ருதிஹாசன் செல்லவில்லை. இரண்டாவது மகளான அக்ஷராஹாசன் மட்டுமே தனது அப்பாவுடன் பிரச்சாரத்தில் உதவியாக இருந்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X