படுக்கையறையில் பிரபல நடிகருடன் படு நெருக்கமாக ஸ்ருதி ஹாசன்.. வைரலாகும் வீடியோ!
சென்னை: நடிகை ஸ்ருதி ஹாசன் பிரபல நடிகருடன் படுக்கையறையில் நெருக்கமாக நடித்திருக்கும் காட்சி வைரலாகி வருகிறது.
Recommended Video
இந்தியில் வெளியான லக் என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.
பாடகியாகவும் உள்ள ஸ்ருதி ஹாசன், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.

விஜய் சேதுபதியுடன்
விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இதேபோல் இந்தி மற்றும் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். தற்போது தெலுங்கில் 2 படங்கள் இந்தியில் ஒரு படம், தமிழில் விஜய்சேதுபதியுடன் லாபம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

படுக்கையறை காட்சி
இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் பிரபல நடிகருடன் நெருக்கமாக நடித்துள்ள படுக்கையறை காட்சி வைரலாகி வருகிறது. அதாவது நடிகை ஸ்ருதி ஹாசன், இந்தியில் வித்யுத் ஜம்வால் உடன் இணைந்து யாரா என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஹீரோவுடன் நெருக்கம்
இந்தப் படத்தின் ட்ரெயிலர் அண்மையில் வெளியானது. சண்டைக்காட்சிகள், ரொமான்ஸ் என கலந்து கட்டி உள்ளது யாரா. இதன் ஒரு காட்சியில் ஸ்ருதி ஹாசன் ஹீரோவுடன் நெருக்கமாக நடித்துள்ளார். அதாவது படுக்கையறை காட்சியில் நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.

ஸ்ருதியா இப்படி?
இந்தக் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்த ட்ரெயிலரை ஏராளமானோர் பார்த்து ரசித்துள்ளனர். இந்த படுக்கையறை காட்சியை பார்த்த ரசிகர்கள் ஸ்ருதி ஹாசனா இப்படி நடித்துள்ளார் என வாயை பிளந்துள்ளனர். இந்த ட்ரெயிலரை இதுவரை சுமார் 5 லட்சம் பேர் வரை பார்த்துள்ளனர்.

தாராளம்
ஸ்ருதி ஹாசன் தாராளமாய் நடித்துள்ள இந்தப் படம் வரும் 30 ஆம் தேதி ஜீ5 தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆக உள்ளது. இந்தப் படம் நட்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











