இது என் முகம், என் வாழ்க்கை... அதை சொல்ல எனக்கு வெட்கமில்லை... ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி
சென்னை: இது என் முகம், என் வாழ்க்கை, அதைச் சொல்ல எனக்கு வெட்கமில்லை என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தில் நடித்து வருகிறார், ஸ்ருதிஹாசன். இதில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்கிறார். தெலுங்கில், ரவிதேஜாவுடன் கிராக் படத்தில் நடித்துவருகிறார்.
நடிகை ஸ்ருதிஹாசன் சில மாதங்களுக்கு முன் தனது மூக்கில் பிளாஷ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக செய்திகள் வெளியானது.
உடல் எடை
இதுபற்றி அவர் எதுவும் சொல்லாத நிலையில், இப்போது அவர் அதை ஒப்புக்கொண்டுள்ளார்.
அவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஒல்லியாக இருக்கும் அவரது முகம் சோகமாக இருக்கிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், உடனடியாக சாப்பிட்டு உடல் எடையை அதிகரிக்கும்படி கூறியுள்ளனர்.

நோயாளி போல
வழக்கமான உங்கள் அழகை காணவில்லை. இது யாரோ போல் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். அநியாயத்துக்கு இப்படி ஒல்லியாயிட்டீங்களே என்றும் நோயாளி மாதிரி தெரியறீங்க என்றும் கிண்டலாகத் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து மற்றொரு போட்டோவை பதிவிட்ட ஸ்ருதி, ரசிகர்களின் ட்ரோல்களுக்குப் பதிலளித்துள்ளார்.

உடல் மாற்றங்கள்
அதில், என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்பவள் அல்ல. இருந்தாலும் இதை சொல்கிறேன். குண்டாக இருக்கிறாள், ஒல்லியாக இருக்கிறாள் என்று சொல்வதைத் தவிர்க்க வேண்டும். இந்த இரண்டு புகைப்படங்களும் மூன்று நாட்கள் இடைவெளியில் எடுத்தது. உடல் மாற்றங்கள் எளிதானதல்ல.

அன்பை பரப்புங்கள்
புகழ்பெற்றவராக இருந்தாலும் இல்லை என்றாலும் மற்றவர் பற்றித் தீர்ப்பளிப்பது சரியல்ல. இது என் முகம், என் வாழ்க்கை என்று சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆமாம். நான் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். அதைச் சொல்ல எனக்கு வெட்கமில்லை. மனதின் இயக்கத்தையும் மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். அன்பை பரப்புங்கள் என்று தெரிவித்துள்ளார். ஸ்ருதிஹாசனின் இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











