பாய்பிரண்டுடன் நெருக்கம்...வைரலாகும் ஸ்ருதிஹாசனின் ரொமான்டிக் போட்டோஸ்

சென்னை : கமலின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் சமீப காலமாக, கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி, அந்த படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இதில் பல படங்கள் வைரலாகி வருவது வழக்கம்.

இந்நிலையில் ஸ்ருதிஹாசன், கவுஹாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்ற டூடுல் ஆர்டிஸ்ட் மற்றும் ராப் பாடகரை காதலிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் அவருடன் இருக்கும் ரொமாண்டிக் படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்திருக்கிறார் ஸ்ருதி.

மீண்டும் காதலில் விழுந்த ஸ்ருதி

மீண்டும் காதலில் விழுந்த ஸ்ருதி

சமீபத்தில் தனது பிறந்தநாளின் போது இளைஞர் ஒருவருடன் ஸ்ருதிஹாசன் உணவகத்திற்கு சென்றபோது அங்கு எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியானது. அதை பார்த்தவர்கள், ஸ்ருதி மீண்டும் காதலில் விழுந்து விட்டார் எனப் பேச துவங்கினர். அவர் சாந்தனு ஹசாரிகா என்ற டூடுல் ஆர்டிஸ்ட் மற்றும் ராப் பாடகர் எனத் தெரிய வந்தது.

வைரலாகும் ரொமான்ஸ் போட்டோ

வைரலாகும் ரொமான்ஸ் போட்டோ

இப்போது, ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சாந்தனுவைக் கட்டிப்பிடித்தபடி இருக்கும் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். சென்னை சில்லிங் சீன்ஸ் என அதற்கு தலைப்பிட்டுள்ளார். ஸ்ருதியை சந்திக்க சாந்தனு சென்னைக்கு வந்த போது இந்த போட்டோக்கள் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ள இந்த ரொமான்டிக் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படங்கள் அதிக லைக்குகளையும் அள்ளி வருகிறது.

அடிக்கடி சந்திப்பு

அடிக்கடி சந்திப்பு

சமீபத்தில் ஸ்ருதிஹாசன் சாந்தனு ஹசாரிகாவுடன் மும்பையில் பொது இடங்களுக்கு சென்று வந்ததும், அதைத் தொடர்ந்து சாந்தனு விமான நிலையத்திற்கு வந்து ஸ்ருதியை வழியனுப்பி வைத்த நிகழ்வுகளும் நடந்துள்ளது.

கமலும் வெளியிட்ட சாந்தனுவின் ஆர்ட்

கமலும் வெளியிட்ட சாந்தனுவின் ஆர்ட்

தேர்தலை முன்னிட்டு நேற்று, கமல் தனது வித்தியாசமான ஆர்ட் போட்டோ ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்த படத்தை வடிவமைத்தது சாந்தனு தான். இதனை கமல் அந்த போட்டோவுடன் குறிப்பிட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X