தமிழ் பொண்ணு...வைரலாகும் ஸ்ருதிஹாசனின் மாஸ்க் ஃபோட்டோ
சென்னை : நடிகை, பாடகி என பன்முக திறமையால் திரையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர், கமலின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன். சமீபத்தில் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்த வக்கீல் சாப் படத்தில் முக்கிய வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார்.
தமிழில் இவர், விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த லாபம் படமும் ரிலீசிற்கு தயாராக உள்ளது. படங்களில் பிஸியாக இருந்தாலும், தனது புதிய காதலரும் டூடுல் கலைஞருமான சாந்தனு ஹசாரிகாவுடன் பொழுதை செலவிடவும் ஸ்ருதி தவறுவதில்லை.

காதலருடன் நெருக்கம்
சமீப காலமாக தனது காதலருடன் எடுத்துக் கொண்ட நெருக்கமான ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். கடந்த வாரம், லாக்டவுனில் மும்பையில் தனது காதலருடன் பொழுதை செலிடுவதாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். இந்த ஃபோட்டோக்கள் வைரலாகின.

நடிகைகளை வறுத்தெடுத்த ஸ்ருதி
இதைத் தொடர்ந்து இந்தியாவும், உலக நாடுகளும் கொரோனாவில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் போது மாலத்தீவில் உல்லாசமாக கவர்ச்சி ஃபோட்டோக்களை வெளியிடும் சக நடிகைகளை கடுமையாக விமர்சித்து ஸ்ருதிஹாசன் கருத்து பதிவிட்டார். இதற்கு பாராட்டுக்களும், ஆதரவுகளும் குவிந்தன.
தமிழ் பொண்ணு மாஸ்க்
இந்நிலையில் நீல நிறத்தில் கற்கள் பதிக்கப்பட்டு, வேலைபாடுகள் நிறைந்த மாஸ்க் அணிந்திருக்கும் தனது ஃபோட்டோவை ஸ்ருதி, நேற்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இந்த மாஸ்கின் ஒரு புறத்தில் தமிழ் என்றும், மற்றொரு புறத்தில் பொண்ணு எனவும் ஆங்கிலத்தில், வெள்ளி நிற கம்பியால் பொறிக்கப்பட்டிருந்தது.

வைரலாகும் மாஸ்க் ஃபோட்டோ
லாபம் படத்தை தொடர்ந்து பிசாந்த் நீல் இயக்கும் சலார் படத்தில் கதாநாயகியாக ஸ்ருதி நடிக்க உள்ளார். அடுத்ததாக ஸ்ருதி நடிக்கும் மிகப் பெரிய பட்ஜெட் படங்களில் இதுவும் ஒன்று.


Click it and Unblock the Notifications











