அப்படி பண்றது பப்பி பப்பி ஷேம்.. லோகேஷ் கனகராஜுடனான பேட்டியில் ஸ்ருதிஹாசன் சொன்ன மேட்டர்!

சென்னை: கமல்ஹாசனுடன் விக்ரம் படத்தில் பணியாற்றிய லோகேஷ் கனகராஜ் தற்போது ராஜ்கமல் தயாரிப்பில் கமலுடைய மகள் ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து காதல் பாடல் ஒன்று கட்டிப்பிடித்து உருண்டு புரண்டு உச்சக்கட்ட கெமிஸ்ட்ரியுடன் நடித்துள்ள 'இனிமேல்' ஆல்பம் பாடல் மார்ச் 25ம் தேதி வெளியாகிறது.

'இனிமேல்' ஆல்பம் பாடலின் ஃபர்ஸ்ட் லுக்கில் ஸ்ருதிஹாசன் உடன் லோகேஷ் கனகராஜை பார்த்ததுமே ரசிகர்கள் 'யோவ் மிலிட்ரி எங்கேயே நீ இங்கே' என கேட்க ஆரம்பித்து விட்டனர்.

Shruti Haasan says don t look at partner phone without permission

அதைவிட சில நொடி டீசர் வெளியாகி சமூக வலைதளத்திலும் சினிமா வட்டாரத்திலும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. இந்நிலையில், நேற்று ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் இணைந்து பேட்டி அளித்துள்ளனர்.

யாருமே புரபோஸ் பண்ணல: நடிகை ஸ்ருதிஹாசனை யாராவது வியர்ட்டாக ரசிகர்கள் புரபோஸ் செய்துள்ளனரா என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஸ்ருதிஹாசன், "என்னை யாருமே புரபோஸ் பண்ணதில்லை, என் மூஞ்சியை பார்த்தாலே இவ எல்லாம் ஓகே சொல்ல மாட்டான்னு" போயிடுவாங்க என்றார். லோகேஷ் தனக்கு அது போன்ற அனுபவம் ஏதும் இல்லை என்றதும், எல்லா பெண்களும் இவரைத்தான் லவ் பண்றாங்க, ஆண்கள் கூட இவரை காதலிக்கிறாங்க என ஸ்ருதிஹாசன் பதிலளித்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

Shruti Haasan says don t look at partner phone without permission

ஹீரோ காரு வந்தாரு: இந்த பாடலை முதலில் வேறு மாதிரி தான் டிசைன் செய்திருந்தேன். விக்ரம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒருமுறை சென்ற போது இந்த ஃபேஸ் கேமரா ஃபேஸ் ஆச்சே நடிக்க வைக்கலாம் என அப்பவே யோசித்தேன். அதன் பின்னர் இப்போ லோகேஷை அணுகும் போது முதலில் 'நோ' சொல்லி மறுத்தார். அதன் பின்னர் பாடலை கேட்கவைத்து கான்செப்ட்டை சொல்லி புரிய வைத்ததும் தான் ஹீரோ காரு வந்தாரு, இப்படியொரு பாடல் உருவானது என்றார் ஸ்ருதிஹாசன்.

அது பப்பி ஷேம்: பார்ட்னரின் போனை பார்ப்பீங்களா என்கிற கேள்விக்கு, அது பப்பி பப்பி ஷேம் காதலரின் போனை அவரது அனுமதி இல்லாமல் பார்க்க மாட்டேன். ஆனால், என்ன இருக்கும் என்கிற கியூரியாசிட்டி இருக்கும். ஏய் போனை கொடுண்ணு கேட்டு வாங்கிப் பார்ப்பேன் என ஸ்ருதிஹாசன் பதிலளித்தார். பார்ட்னர் போன் மட்டுமில்லை யாருடைய போனாக இருந்தாலும் பார்க்க மாட்டேன். அவங்களுக்கான பிரைவஸி வேண்டும் அல்லவா என லோகேஷ் கனகராஜ் ஜென்டில்மேன் பதிலளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X