லோகேஷ் கனகராஜை லவ் பண்ணாத ஆளு யாரு இருக்கா?.. நெருக்கமாக நடித்தது குறித்து மனம் திறந்த ஸ்ருதிஹாசன்!
சென்னை: கோலிவுட்டின் புதிய காதல் ஜோடியாகவே லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் மாறிவிட்டார்களா? என்கிற அளவுக்கு சோஷியல் மீடியாவே ஸ்தம்பித்துப் போய் கிடக்கும் 'இனிமேல்' ஆல்பம் பாடல் குறித்து லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் பிரத்யேகமாக அளித்துள்ள பேட்டி ராஜ்கமல் யூடியூப் சேனலில் தற்போது வெளியாகி இருக்கிறது.
ஸ்ருதிஹாசன் ஆங்கிலத்தில் எழுதி உருவாக்க நினைத்த பாடலாக முதலில் இது இருந்தது என்றும் அதன் பின்னர் அப்பா கமல்ஹாசன் உடன் இணைந்து தமிழில் பண்ணலாமே என கேட்க, அவரும் பாடல் வரிகளை தமிழில் எழுதி கொடுக்க லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து செம ரொமான்டிக் பாடலாக 'இனிமேல்' மாறிவிட்டது என ஸ்ருதிஹாசன் சொல்லியுள்ளார்.

ஸ்ருதிஹாசன் எதற்கு என்னை இந்த பாடலுக்கு தேர்வு செய்தார் என்றே தெரியவில்லை. ஆனால், அவரது கிரியேட்டிவிட்டியை பார்த்து மிரண்டு போய் விட்டேன் என லோகேஷ் கனகராஜும் தான் லவ்வர் பாயாக நடித்துள்ள அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
ஸ்ருதிஹாசனின் ஐடியா: 7ம் அறிவு படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் கமல் நடித்து வெளியான உன்னைப்போல் ஒருவன் படத்திலேயே ஒரு பாடல் பாடி அசத்தியிருப்பார். அதன் பின்னர் சினிமாவிலும் ஆல்பம் பாடல்களை தனியாகவும் அவர் உருவாக்கி உள்ளார். இந்நிலையில், அவரது ஐடியா தான் இந்த 'இனிமேல்' பாடல் உருவாக காரணமே என லேட்டஸ்ட் பேட்டியில் கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜை லவ் பண்ணாத ஆளே இல்லை: லவ்வர் பாயாக திடீரென லோகேஷ் கனகராஜ் ஸ்ருதிஹாசன் உடன் ஜோடி போட்டு எப்படி நடித்தார் என்கிற கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் கூச்சப்பட்டே பதில் அளித்து வந்தார். எக்ஸ் லவ், கோஸ்டிங் எல்லாம் நடந்திருக்கா என்கிற கேள்விக்கு அதெல்லாம் இல்லைங்க என லோகேஷ் சொல்ல, உடனே ஸ்ருதிஹாசன், "இவரை லவ் பண்ணாத ஆளே இல்லை.. எல்லா பெண்களும் லோகேஷை லவ் பண்றாங்க.. பெண்களை போலவே ஆண்களும் இவரை லவ் பண்றாங்க" என செம ஓபனாக ஸ்ருதிஹாசன் பேசினார்.
3 நாள் டே நைட் ஷூட்டிங்: 4 நிமிடங்கள் உருவாகி உள்ள இந்த பாடலின் ஷூட்டிங் 3 நாட்கள் டே, நைட் நடந்தது என்றும் எனக்கு எதுவுமே தெரியாது என்னை ஏன் இதில் நடிக்க வைக்க கேட்கிறீங்க என்று ஸ்ருதியிடம் கேட்டேன். பாடலை கேட்கச் சொன்னார், பிரெஷ்ஷான ஜோடியாக இருந்தால் நல்லா இருக்கும் என்று சொன்னதும் லோகேஷ் நடிக்க சம்மதித்தார் என ஸ்ருதிஹாசன் தான் அந்த பேட்டி முழுவதும் அதிகமாக பதில் சொல்லியுள்ளார்.


Click it and Unblock the Notifications











