லாக்டவுனில் காதலருடன் ஜாலியாக பொழுதை கழித்த ஸ்ருதிஹாசன்...வைரலாகும் ஃபோட்டோ

மும்பை : நடிகர் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், இசை, நடிப்பு என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் மீண்டும் காதலில் விழுந்த ஸ்ருதி, புதிய காதலருடன் நெருக்கமாக இருக்கும் ஃபோட்டோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் தனது காதலரும், டூடுல் கலைஞருமான சாந்தனுவை அ்ழைத்து வந்து கமலுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். தொடர்ந்து கமலும், சாந்தனு வடிவமைத்து தனது வித்தியாசமாக ஃபோட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

லாக்டவுனில் காதலர் வீட்டில் ஸ்ருதி

லாக்டவுனில் காதலர் வீட்டில் ஸ்ருதி

தற்போது ஸ்ருதி மும்பையில் இருந்து வருகிறார். மும்பையில் கொரோனா பரவல் காரணமாக கிட்டதட்ட லாக்டவுன் போடப்பட்டுள்ளதால், மும்பையில் காதலர் சாந்தனுவின் வீட்டில் தங்கி, அவருடன் பொழுதை கழித்து வருகிறார்.

பூனைக்குட்டி தான் துணை

பூனைக்குட்டி தான் துணை

இவர்களுடன் தங்கி இருந்த மற்றொரு நபர், இவர்களின் செல்ல வளர்ப்பு பிராணியான பூனைக்குட்டியாம். இந்த பூஜைக்குட்டி மற்றும் காதலருடன் எடுத்த ஃபோட்டோக்களை ஸ்ருதி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த ஃபோட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

கடினமான சமயம்

கடினமான சமயம்

மேலும் அத்துடன் ஸ்ருதி பதிவிட்டுள்ள கருத்தில், இது மிகவும் கடினமான சமயம். நான் வேடிக்கையான காரியங்களை செய்து வருகிறேன். ஆக்கப்பூர்வமான விஷயங்கள் சலிப்படைய செய்கின்றன. இடைவிடாத ஃபோட்டோகிராஃபர்கள் மற்றும் அத்தகைய நல்ல ஆத்மாக்களுக்கு இந்த லாக்டவுன் சமயத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சும்மா இருக்கேன்

சும்மா இருக்கேன்

இன்று பயனற்றவளாக இருப்பதாக உணர்கிறேன். எனது கவலைகளை, பழைய நினைவுகளை நிறுத்தி விட்டேன். இந்த சமயத்தில் துன்பப்படுகிற ஒவ்வொருவருக்காகவும் என் பிரார்த்தனை இருக்கும். எனது ஆற்றலுக்காக கொஞ்சம் தியானம் செய்கிறேன்.

என்னுடன் பேசுங்கள்

என்னுடன் பேசுங்கள்

நீங்கள் என நினைக்கிறீர்கள் என சொல்லுங்கள். ஒவ்வொரும் மற்றவர்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும். ஏதாவது தகவல் என்னுடன் பகிர வேண்டும் என்றாலோ அல்லது பேச வேண்டும் என்றாலோ தாராளமாக தெரிவிக்கலாம். அப்படி நினைத்தால் உங்களுக்கான பெரிய அணைப்பு இங்கே காத்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.

காத்திருக்கும் லாபம்

காத்திருக்கும் லாபம்

ஸ்ருதி, விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த லாபம் படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன் திடீரென மரணமடைந்ததால், இந்த படத்தை தானே வெளியிடுவதாக விஜய் சேதுபதி தெரிவித்தார். ஆனால் தற்போது லாக்டவுன் போடப்பட்டுள்ளதால் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படாமல் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X