shruti haasan : நானியின் 30வது படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன்.. என்ன கதாபாத்திரம் தெரியுமா?
சென்னை : தெலுங்கு நடிகர் நானியின் 30வது படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பான் இந்திய திரைப்படமான தசரா படத்தில், நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, தீக்ஷித் ஷெட்டி, ஷைன் டாம் சாக்கோ, ஜரீனா வஹாப், சமுத்திரக்கனி ஆகியோர் லீட்ரோலில் நடித்திருந்தனர்.
கிராமத்து பின்னணியில் உருவாகி உள்ள இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தசரா : தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியான தசரா திரைப்படத்தில், நானி முதல் பாதியில் அப்பாவி இளைஞனாகவும் இரண்டாம் பாதியில் ரத்தக்களறி முகத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட ரக்கட் பாயாகவும் வலம் வந்து தசரா படத்தில் மிரட்டி இருந்தார்.
முக்கியமான படம் : இப்படத்தின் சில காட்சிகள் ரியலாக வரவேண்டும் என்பதற்காக சில காட்சியில் நானி ரியலாக குடித்துவிட்டு நடித்திருந்தார். கடந்த மாதம் திரையரங்கில் வெளியான தசரா படம் வசூலை அள்ளியது. இப்படம் நானியின் திரைவாழ்க்கையில் மிகவும் திருப்புமுனையை இத்திரைப்படம் ஏற்படுத்தி உள்ளது.

நானியின் 30வது படம் : தசரா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது 30வது படத்தில் நானி நடித்து வருகிறார். வைர என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஷூர்யுவ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சீதாராமம் படத்தின் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர் கதாநாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். மேலும், ஹிருதயம் படத்தின் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
நானியுடன் ஸ்ருதி : இப்படம் வரும் டிசம்பர் 21ந் தேதி கிறிஸ்துமஸ் பாண்டிகையையொட்டி வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஸ்ருதிஹாசன் பிரபாசுடன் இணைந்து சலார் படத்தில் நடித்து வருகிறார்.
வயதான நடிகர்களுடன் : ஸ்ருதிஹாசன் அண்மையில் நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். வரலட்சிமி சரத்குமார், ஹனி போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் பாக்ஸ் ஆபிசில் கலேக்ஷனை அள்ளியது. இதே போல சிரஞ்சீவி நடித்திருந்த வால்டர் வீரய்யா படத்திலும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.


Click it and Unblock the Notifications