மயில் கூட்டத்திற்கு நடுவில் குயிலாய் ஸ்ருதிஹாசன்.. சோலோ சுற்றுலா.. சூப்பர்ல!
சென்னை : நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத் திறமை காட்டி வருபவர் ஸ்ருதி ஹாசன்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்துவரும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் வீரசிம்ஹ ரெட்டி, வால்டர் வீரய்யா என இரண்டு படங்கள் தெலுங்கில் ரிலீசாகி சூப்பர் ஹிட்டடித்துள்ளன.
தற்போது கேஜிஎப் படத்தை இயக்கிய பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்தப் படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய அளவில் பிரபலமான நடிகையாக உள்ளார். தமிழில் முதல் படத்திலேயே நடிகர் சூர்யாவுடன் 7ம் அறிவு என்ற படத்தில் அறிமுகமாகி, தொடர்ந்து விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துவந்த இவர் பாலிவுட்டிலும் தற்போது படங்கள், வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்த வெற்றிப்படங்கள்
இதனிடையே கடந்த பொங்கலையொட்டி சிரஞ்சீவியுடன் வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவுடன் வீரசிம்ஹ ரெட்டி என இரண்டு படங்கள் ஸ்ருதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இந்த இரு படங்களுமே இவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது. தொடர்ந்து தெலுங்கிலேயே கேஜிஎப் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரபாசுடன் ஸ்ருதி ஜோடி சேர்ந்துள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாறுமாறு கேள்விகள்.. கூல் பதில்கள்
அதிரடியான கேரக்டர்களில் நடித்துவரும் ஸ்ருதிஹாசன், தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் அதிரடியான பல விஷயங்களை செய்து வருகிறார். தன்னுடைய காதலர் சாந்தனுவுடன் டேட்டிங்கில் உள்ள ஸ்ருதி, சமீபத்தில் அவருடன் முத்தங்களை பரிமாறிக் கொண்ட வீடியோவையும் வெளியிட்டார். சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூக வலைதளம் மூலம் பதிலளித்தார், அதில் அவரிடம் அவருடைய வெர்ஜினிட், டேட்டிங் உள்ளிட்ட பல தாறுமாறு கேள்விகளுக்கும் கூலாக பதிலளித்திருந்தார்.

பன்முகத்திறமை கொண்ட ஸ்ருதி
இதில் ஸ்ருதியுடன் டேட்டிங்கில் இருக்க விருப்பம் தெரிவித்த நபருக்கு அதிரடியாக சாந்தனுவை காட்டி, தான் அவருடன் டேட்டிங்கில் உள்ளதையும் வெளிப்படையாகவே கூறினார். முன்னதாக இசையமைப்பாளராகவும் பாடகியாகவும் இருந்துவரும் ஸ்ருதிஹாசன், தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட்டிலும் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் குறிப்பிட்ட சில படங்களிலேயே நடித்துள்ள போதிலும் அதிகமான ரசிகர்கள் வட்டத்தை கொண்டுள்ளார்.

கொடைக்கானலில் சுற்றுப்பயணம்
அதிகமான சுற்றுப்பயணங்களை விரும்புபவராக உள்ள ஸ்ருதிஹாசன் தற்போது கொடைக்கானலில் சுற்றுலா செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனியாகவே இந்த சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். இடையில் மயில் கூட்டங்களுக்கு நடுவில் குயிலாய் பாடியபடி அவர் தன்னுடைய பயணத்தை தொடர்ந்துள்ளார். மிகவும் அழகான தருணங்களை கொடுக்கும் கோடைக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்


Click it and Unblock the Notifications











