கத்தி படத்தில் விஜய்யுடன் 'டூயட்' பாடும் ஸ்ருதி ஹாஸன்
சென்னை: விஜய்யின் கத்தி படத்தில் ஸ்ருதி ஹாஸனும் உள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து வரும் கத்தி படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்ற தகவலை இத்துடன் பலமுறை தெரிவித்துவிட்டோம். இருந்தாலும் மீண்டும் கூற வேண்டிய நிலை.
அப்படி என்ன நிலை என்று படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஸ்ருதி
கத்தி படத்தில் ஸ்ருதி ஹாஸன் உள்ளார் என்று முதல் வரியில் படித்தது உண்மை தான். ஆனால் அவர் நடிக்கவில்லை மாறாக விஜய்யுடன் சேர்ந்து ஒரு பாடல் பாடுகிறார்.

அனிருத்
கத்தி படத்திற்கு நீங்கள் தான் இசை என்று முருகதாஸ் அனிருத்திடம் தெரிவித்ததுமே விஜய்யை பாட வைப்பது என்று அவர் முடிவு செய்துவிட்டார்.

விஜய்
விஜய் அண்ணா நீங்க கண்டிப்பாக கத்தி படத்தில் பாட வேண்டும் என்று அனிருத் அன்பு கோரிக்கை வைக்க இளைய தளபதியால் மறுக்க முடியவில்லை.

டூயட்
பிற மொழி படங்களில் பிசியாக இருக்கும் ஸ்ருதியை செல்போனில் தொடர்பு கொண்ட அனிருத் விஜய்யுடன் டூயட் பாட வேண்டும் என்று கூற அவரும் ஓ.கே. சொல்லிவிட்டார்.

ஹீரோவாச்சே
கத்தி படத்தை அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதி நடிக்கிறார். அப்படி இருக்கையில் தனது ஹீரோவுடன் டூயட் பாட வேண்டாம் என்றா கூறுவாரா.


Click it and Unblock the Notifications











