அம்மாவுடன் சேர்ந்து நடிக்கணும், ஆனால்...: ஸ்ருதி ஹாஸன்
சென்னை: ஸ்ருதி ஹாஸனுக்கு தனது அம்மா சரிகாவுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ருதி ஹாஸன். அப்பா கமல் ஹாஸனின் செல்லமான ஸ்ருதி மும்பையில் தங்கி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
தனது காதலர் மைக்கேலை பார்க்க அவ்வப்போது லண்டன் சென்று வருகிறார்.

படம்
என் அம்மா சரிகாவுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். நாங்கள் சேர்ந்து ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறோம். தற்போது தான் ஒன்றாக சேர்ந்து வேலை செய்யத் துவங்கியுள்ளோம். என் தந்தையுடன் சேர்ந்து பல முறை பணியாற்றியுள்ளேன். ஆனால் அம்மாவுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது என்கிறார் ஸ்ருதி ஹாஸன்.

கமல்
அப்பா, அம்மா ஆகிய இருவரும் திறமையான கலைஞர்கள் என்பதால் நான் படங்களில் சிறப்பான நடிப்பையே வெளிப்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் எதுவும் இல்லை. இது என் வாழ்க்கை. நான் அவர்களை பெருமையடைய செய்ய விரும்புகிறேன். நான் கடினமாக உழைக்கிறேன் என்பதை பார்த்து அவர்கள் நிச்சயம் பெருமையடைந்திருப்பார்கள். அது தான் முக்கியம் என்று ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

நடிகர்
அப்பாவும், அம்மாவும் 4 வயதில் இருந்து நடித்து வருகிறார்கள். அவர்களுடன் போட்டி போட முடியாது. என்னை என் பெற்றோருடன் ஒப்பிடுவார்கள் என்று தெரியும். ஆனால் அதை எல்லாம் நான் கண்டுகொள்வது இல்லை. சினிமா துறை நமக்கு நிறைய பொறுமையை கற்றுக் கொடுக்கும். நான் திட்டம் போட்டு நடிகையாகவில்லை. நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன் என்று ஸ்ருதி கூறியுள்ளார்.
சரிகா
நேற்று ரக்ஷா பந்தன் வடநாட்டில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. ரக்ஷா பந்தன் அன்று சகோதரிகள் தங்களின் சகோதரர்களுக்கு ராக்கி கட்டுவார்கள். ஆனால் ஸ்ருதி ஹாஸனோ சற்று வித்தியாசமாக தனது தாய் சரிகாவுக்கு ராக்கி கட்டி அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











