என்னம்மா கட்டிப்பிடிச்சு கொஞ்சுறாங்க.. பிறந்தநாளில் புதிய காதலரை அறிமுகப்படுத்திய ஸ்ருதிஹாசன்!

சென்னை: பிறந்தநாள் அதுவுமா தனது புதிய காதலரை நடிகை ஸ்ருதிஹாசன் அறிமுகப்படுத்தி உள்ளார்.

இருவரும் கட்டியணைத்து கொஞ்சும் புகைப்படம் இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ருதிஹாசன் தனது 35வது பிறந்தநாளை நேற்று மும்பையில் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் கொண்டாட்டம்

மும்பையில் கொண்டாட்டம்

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சரிகா தம்பதியினரின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் நேற்று தனது 35வது பிறந்தநாளை மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்கள் சூழ கோலாகலமாக கொண்டாடினார். கருப்பு மற்றும் கிரே நிற பலூன்களுடன், சில சாக்லேட் கேக்குகளை கட் செய்து தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

நடிகைகள் தமன்னா, ரகுல் ப்ரீத் சிங், அக்‌ஷரா ஹாசன், நடிகர் ராணா டகுபதி, ஹிரித்திக் ரோஷன் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட பிறந்தநாள் ஹாஷ்டேக்குகளையும் போட்டோக்களையும் மாஷ் அப்களையும் போட்டு ரசிகர்கள் வாழ்த்தினர்.நடிகைகள் தமன்னா, ரகுல் ப்ரீத் சிங், அக்‌ஷரா ஹாசன், நடிகர் ராணா டகுபதி, ஹிரித்திக் ரோஷன் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட பிறந்தநாள் ஹாஷ்டேக்குகளையும் போட்டோக்களையும் மாஷ் அப்களையும் போட்டு ரசிகர்கள் வாழ்த்தினர்.

சலார் படத்தில்

சலார் படத்தில்

ஸ்ருதிஹாசனின் பிறந்தநாள் பரிசாக நடிகர் பிரபாஸின் சலார் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. கேஜிஎஃப் இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த சந்தோஷமான செய்தியை ஷேர் செய்து ஸ்ருதிஹாசனை வாழ்த்தினார்.

புதிய காதலர்

புதிய காதலர்

ஆனால், அனைத்திற்கும் மேலாக நடிகை ஸ்ருதிஹாசன் தனது 35வது பிறந்தநாளில் தனது புதிய காதலரை அறிமுகப்படுத்தியது தான் அனைவரையுமே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. காதலருடன் இறுக்கமாக கட்டிப்பிடித்து பிறந்தநாளை கொண்டாடிய ஸ்ருதிஹாசனின் புகைப்படம் மின்னல் வேகத்தில் வைரலாகி வருகிறது.

சாந்தனு ஹசாரிகா

சாந்தனு ஹசாரிகா

டூடுல் வடிவமைப்பாளரான சாந்தனு ஹசாரிகா தான் நடிகை ஸ்ருதிஹாசனின் புதிய காதலர் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஸ்ருதிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அவர், "ஹேப்பி பர்த்டே லவ்" என்றும் அதற்கு பதிலாக ஸ்ருதி, என் பிறந்தநாளை சந்தோஷமாக மாற்றியதற்கு நன்றி என அவருடன் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு அனைவரையும் அதிரவைத்துள்ளார்.

முன்னாள் காதலர்

முன்னாள் காதலர்

முன்னதாக இங்கிலாந்தை சேர்ந்த டிவி நடிகர் மைக்கேல் கோர்சலே என்பவரை காதலித்து வந்தார் நடிகை ஸ்ருதிஹாசன். சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றுக்கு மாப்பிள்ளை போல வேட்டி சட்டையில் அவரை அலங்கரித்து அப்பா கமலுக்கெல்லாம் அறிமுகப்படுத்தினார். ஆனால், அதன் பின்னர் இருவரும் பிரேக்கப் செய்து கொண்டனர். அதன் காரணமாக சினிமாவில் இருந்து 2 ஆண்டுகள் ஓய்வில் இருந்தார் ஸ்ருதிஹாசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X