'இதுக்காகத்தான் மூக்கு ஆபரேஷன் பண்ணினேன்.. உதட்டுக்கு, வேற மாதிரி சிகிச்சை' ஸ்ருதிஹாசன் விளக்கம்

By

சென்னை: எதற்காக மூக்கு ஆபரேஷன் செய்துகொண்டேன் என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ருதிஹாசன் சில மாதங்களுக்கு முன் தனது மூக்கில் பிளாஷ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாகச் செய்திகள் வெளியானது.

இதுபற்றி அவர் எதுவும் சொல்லாத நிலையில், நேற்றுமுன் தினம் அதை அவர் ஒப்புக்கொண்டார்.

என் முகம், என் வாழ்க்கை

என் முகம், என் வாழ்க்கை

அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்த புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் ட்ரோல்

செய்தனர். பின்னர் மற்றொரு போட்டோவை பதிவிட்ட ஸ்ருதி, ட்ரோல்களுக்குப்

பதிலளித்தார். அப்போது, என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்பவள் அல்ல. இருந்தாலும் இதை சொல்கிறேன். இது என் முகம், என் வாழ்க்கை என்று சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இரண்டுமுறை காயம்

இரண்டுமுறை காயம்

எனக்கும் மற்றவர்களைப் போல மூக்கு சாதாரணமாகத்தான் இருந்தது. வளர்ந்த பின் இரண்டு முறை மூக்கில் காயம் ஏற்பட்டது. இதனால் அது வளைந்துவிட்டது. அதைப் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை. அதோடு மூச்சுவிடுவதிலும் சிரமம் இருந்தது. அதனால் ஆபரேஷன் செய்துகொண்டேன். இதை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

உதட்டிலும் சிகிச்சை

உதட்டிலும் சிகிச்சை

பல நடிகர்கள் தங்கள் முகத்தில் செய்துள்ள மாற்றங்களைப் பற்றி வெளியே சொல்ல மாட்டார்கள். இதுபோன்ற விஷயங்களை மறைப்பது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது என்றார். அதோடு, உதட்டில் ( lip fillers) சிகிச்சை செய்து கொண்டதையும் ஒப்புக் கொண்டுள்ளார், நடிகை ஸ்ருதி ஹாசன்.

மெலிதாக இருந்ததால்

'என் உதடுகள் மெலிதாக இருந்ததால் பிடிக்கவில்லை. அதனால் அந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டேன். இப்போது எனது இயல்பான தோற்றத்துக்கு நெருக்கமாக வந்துவிட்டேன். சினிமாவில் எத்தனை பேர், இந்த உதட்டுச் சிகிச்சையை செய்துள்ளார்கள் என்பது தெரியும். ஆனால், அவர்கள் வெளியே சொல்லமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X