விஷாலுக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்
ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் படத்திற்கு ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஷால் தயாரித்து நடித்த 'பாண்டியநாடு' படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 'நான் சிகப்பு மனிதன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் லட்சுமி மேனன், ஜெகன், சுந்தர் ராம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

விஷால் தயாரிக்கும் இந்த படத்தை திரு இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். யு.டிவி நிறுவனம் வெளியிடுகிறது.
'நான் சிகப்பு மனிதன்' படத்தைத் தொடர்ந்து ஹரி இயக்கவிருக்கும் படத்தை நடித்து தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் விஷால். படத்தின் நாயகியாக ஸ்ருதிஹாசனிடம் பேசி ஒப்பந்தம் செய்து இருக்கிறார்களாம்.
'நான் சிகப்பு மனிதன்' குறுகிய கால தயாரிப்பு தான் என்பதால், விரைவில் ஹரி - விஷால் - ஸ்ருதிஹாசன் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











