குட்டை டவுசரில் தோசை சுட்ட ஸ்ருதிஹாசன்...வைரலாகும் வீடியோ

சென்னை : பாடகி, இசையமைப்பாளர், நடிகை, மாடல் என பல துறைகளிலும் சிறந்து விளங்குபவர் நடிகை ஸ்ருதிஹாசன். நடிகர் கமலின் மூத்த மகளான ஸ்ருதி, 1992 ல் வெளியான கமல் நடித்த 'தேவன்மகன்' படத்தில், 'போற்றிப் பாடடி பெண்ணே' பாடலை பாடி தனது திரையுலக பயணத்தை துவக்கினார்.

தொடர்ந்து இந்தி, தமிழில் பல படங்களில் பின்னணி மட்டும் பாடி வந்த ஸ்ருதி, 2000 ல் 'ஹே ராம்' படத்தில் சிறிய ரோலில் நடித்து, நடிப்பு பயணத்தையும் துவக்கினார். இந்தி, தெலுங்கில் பல படங்களில் நடித்த ஸ்ருதி, தமிழில் 'ஏழாம் அறிவு', '3', 'பூஜை', 'புலி', 'வேதாளம்', 'சிங்கம் 3' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

ரிலீசுக்கு காத்திருக்கும் லாபம்

ரிலீசுக்கு காத்திருக்கும் லாபம்

கடந்த சில ஆண்டுகளாக தமிழில் எந்த படத்திலும் நடிக்காத ஸ்ருதிஹாசன், தற்போது மீண்டும் தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த 'லாபம்' படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

குட்டை டவுசருடன் தோசை

இந்நிலையில் சமையலறையில் குட்டை டவுசருடன் தோசை சுடும் வீடியோவை ஸ்ருதி வெளியிட்டுள்ளார். அத்துடன், "விடுமுறையில் இருக்கும்போது சமைப்பதே என் விருப்பமான விஷயம் .நீங்கள் விரும்புபவர்களுக்கு உணவளிப்பதில் மகிழ்ச்சி உண்மையிலேயே மேஜிக்கானது" என கருத்து பதிவிட்டுள்ளார்.

 குவியும் லைக்குகள்

குவியும் லைக்குகள்

பின்னணியில் மிருதங்க இசை ஒலிக்க, ஸ்ருதி வெளியிட்டுள்ள தோசை சுடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை, ஸ்ருதியின் தங்கையும், நடிகையுமான அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்து, கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.

16 மில்லியன் ஃபாலோவர்ஸ்

16 மில்லியன் ஃபாலோவர்ஸ்

சமீபத்தில் தான் இன்ஸ்டாகிராமில் ஸ்ருதியை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 16 மில்லியனை எட்டியது. இதனை தனது நண்பர்களுடன் கேக் வெட்டி ஸ்ருதி கொண்டாடினார். இந்த வீடியோவும் வைரலாகி, வாழ்த்துக்கள் குவிந்தன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X