கமலை அடுத்து சரிகாவை சந்தித்த ஸ்ருதியின் காதலர்: அப்போ...
மும்பை: ஸ்ருதி ஹாஸனின் காதலுக்கு அவரது அம்மாவும் பச்சைக் கொடி காட்டிவிட்டார் போல என்ற பேச்சு கிளம்பியுள்ளது.
நடிகை ஸ்ருதி ஹாஸனும், லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கோர்சேலும் காதலிப்பதாக பல மாதங்களாக பேசப்படுகிறது. காதலர் தினத்தை ஸ்ருதியுடன் சேர்ந்து கொண்டாட மைக்கேல் மும்பை வந்தார்.
அதன் பிறகு லண்டன் சென்ற ஸ்ருதி மைக்கேலுடன் நேரம் செலவிட்டார்.

லண்டன்
லண்டன் சென்றபோது கமல் ஹாஸனும் மைக்கேல் கோர்சேலை சந்தித்து பேசினார். இதனால் மகளின் காதலை கமல் ஏற்றுக் கொண்டார் என்று கூறப்பட்டது.

மும்பை
மைக்கேல் மீண்டும் மும்பை வந்துள்ளார். மைக்கேல், ஸ்ருதி மற்றும் அவரின் தாய் சரிகா ஆகியோர் வெளியே சென்றபோது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

சம்மதம்
கமலை போன்றே சரிகாவும் ஸ்ருதியின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார் என்று கூறப்படுகிறது. ஸ்ருதிக்கும், மைக்கேலுக்கும் 2018ம் ஆண்டு திருமணம் நடக்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

நோ கமெண்ட்ஸ்
மைக்கேல் பற்றி ஸ்ருதியிடம் கேட்டபோது, கணிப்புகள் பற்றி எனக்கு கவலை இல்லை. அது குறித்து நான் எதுவும் சொல்லப் போவதும் இல்லை. என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நான் பேச மாட்டேன் என்றார்.


Click it and Unblock the Notifications











