»   »  பாலிவுட்டின் கவர்ச்சியான நடிகை ஸ்ருதி ஹாஸனாம்: சொல்வது யார் தெரியுமா?

பாலிவுட்டின் கவர்ச்சியான நடிகை ஸ்ருதி ஹாஸனாம்: சொல்வது யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட்டின் கவர்ச்சியான நடிகை ஸ்ருதி ஹாஸன் ஆனால் அவருக்கு நல்ல படங்களை தேர்வு செய்யத் தெரியவில்லை என்கிறார் கேஆர்கே.

பாலிவுட் நடிகரும், விமர்சகருமான கேஆர்கே யாரையாவது கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிருப்பார். அதிசயமாக எப்பொழுதாவது தான் அவர் பாராட்டுவார்.

அந்த அதிசயம் தற்போது நடந்துள்ளது. அதை பார்த்து தான் பாலிவுட் வியக்கிறது.

ஸ்ருதி

எனக்கு பிடித்த நடிகை ஸ்ருதி ஹாஸன். ஏனென்றால் பாலிவுட்டின் கவர்ச்சியான நடிகை அவர் தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவருக்கு நல்ல படங்களை தேர்வு செய்யத் தெரியவில்லை என்று ட்வீட்டியுள்ளார் கேஆர்கே.

ட்வீட்

கேஆர்கேவின் ட்வீட்டை பார்த்த ஒருவர் கமெண்ட் போட்டிருப்பதாவது, துரதிர்ஷ்டவசமாக...ஜுன் 9ம் தேதி பிஹெச்டி படத்தை பார்த்த பிறகு இந்த ட்வீட்டை நீங்கள் நீக்கிவிடுவீர்கள். ஸ்ருதி ஹாஸனை நம்புங்கள் என்றார்.

குரல்

ஸ்ருதி ஹாஸனின் ஒரே பிரச்சனையே அவரின் குரல் தான்... அது இனிமை இல்லை ஆனால் அவர் மிகவும் அழகாக உள்ளார். எனக்கு அவரின் அழகு பிடிக்கும் குரல் அல்ல என்று மற்றொருவர் கமெண்ட் அடித்துள்ளார்.

நடிகை

ஸ்ருதி ஹாஸன் தான் சிறந்தவர்!!! அவரை போன்று வேறு யாரும் இல்லை என ரசிகர் ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood critic KRK said that 'My most favourite is shrutihaasan because she is the hottest girl in Bollywood but unfortunately she doesn't know how to choose good films.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil