ஸ்ருதி ஹாஸனை விடாமல் துரத்தும் 'டி டே' டப்பிங்குகள்!
இந்தியில் ஸ்ருதிஹாஸன் நடித்து சமீபத்தில் வெளியான படம் டி டே. இந்தப் படத்தில் அவர் படு செக்ஸியாக நடித்திருந்தார்.
செக்ஸ் தொழிலாளி வேடம் என்பதால், காட்சிகள் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குநர் சொன்னபடியெல்லாம் நடித்திருந்தார்.

ரீமேக்
ஸ்ருதிஹாஸன் பெரிதாக எதிர்ப்பார்த்த இந்தப் படம் இந்தியில் சரியாகப் போகவில்லை. ஆனாலும் இந்தப் படத்தை தெலுங்கு மற்றும் தமிழில் ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கினர்.

கெலப்பு குர்ரம்
தமிழில் தாவூத் என்ற பெயரில் ப்ரண்ட்ஸ் பிலிம்ஸ் என்ற கம்பெனி டப் செய்துள்ளது. தெலுங்கில் கெலப்பு குர்ரம் என்ற பெயரில் டப் செய்துள்ளனர்.

எதிர்ப்பு
இந்தியில் படு கவர்ச்சியான உடைகள் அணிந்து, ஆபாசக் காட்சிகளில் தோன்றிய ஸ்ருதிஹாஸன், அதே படத்தை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்ய கடும் எதிர்ப்பு காட்டி வருகிறார்.

கண்டுகொள்ளவில்லை
தமிழில் இந்தப் படம் வெளியாகக் கூடாது என ஸ்ருதி ஹாஸன் தெரிவித்த எதிர்ப்பை வெளியீட்டாளர்கள் கண்டு கொள்ளவே இல்லை. தெலுங்கு ரமேஷ் டோட்லா என்பவர் வெளியிடுகிறார்.

ஆபாச படங்கள்
படம் வெளியாவதற்கு முன்னோட்டமாக டி டே படத்தில் ஸ்ருதி ஹாஸன் நடித்த படுக்கையறைக் காட்சிகளின் படங்கள், ஆபாசப் படங்களை இணையதளங்களில் வெளியிட ஆரம்பித்துள்ளனர். ஆனால் இந்தப் படம் வெளியாவதை எப்படியாவது தடுத்துவிடும் முடிவிலிருக்கிறாராம் ஸ்ருதி.


Click it and Unblock the Notifications











