ஸ்ருதிக்கு தொழில் முக்கியம்... என்னுடன் தங்கமாட்டார்! - சரிகா
மும்பை: சமீபத்திய தாக்குதல் காரணமாக ஸ்ருதி என்னுடன் வந்து தங்க மாட்டார். நானும் அப்படிச் சொல்ல மாட்டேன். அவருக்கு தொழில்தான் முக்கியம் என்றார் ஸ்ருதியின் அம்மா சரிகா.
மும்பை வீட்டில் நடிகை ஸ்ருதிஹாசன் தாக்கப்பட்டது அவரது தாய் சரிகாவுக்கு பெரும் கவலையைத் தந்துள்ளது.

தாக்குதல்
மும்பையில் தாய் சரிகா, தங்கை அக்ஷரா ஆகியோர் இருந்தாலும், பாந்தராவில் உள்ள அந்த அபார்ட்மென்டில் ஸ்ருதிஹாசன் தனியாகத்தான் வசித்தார்.
மர்ம நபர் கதவை தட்டியதும் திறந்தார். அப்போதுதான் அந்தத் தாக்குதல் நடந்தது. இதனால் திரையுலகினர் அதிர்ச்சியானார்கள். இந்தத் தாக்குதல் குறித்து முதல் நான்கு தினங்கள் மவுனம் காத்த ஸ்ருதி, பிறகுதான் போலீசுக்குப் போனார்.

கமல்
மகளுக்கு நேர்ந்த இந்த சம்பவம் குறித்து கமல் கவலை தெரிவித்ததோடு, கூடுதல் கவனத்தோடு இருக்குமாறு ஸ்ருதிக்கு அட்வைஸ் செய்தார்.

சரிகா கருத்து
ஸ்ருதியின் தாயான சரிகா, இச்சம்பவம் குறித்து கூறுகையில், "ஸ்ருதி மீது நடந்த தாக்குதல் எனக்கு மிகுந்த கவலையைத் தந்தது. ஸ்ருதி இப்போது நன்றாக இருக்கிறார். எது நடக்ககூடாதோ அது எதிர்பாராமல் நடந்துவிட்டது. இது மாதிரியான நிலைமைகளை எப்படி சமாளிக்க வேண்டும் என இந்த நிகழ்ச்சி கற்றுக் கொடுத்துவிட்டது.

என்னுடன் தங்க மாட்டார்
பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி சாதாரண மக்களுக்கும் இது போன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன.
இந்த தாக்குதலால் ஸ்ருதிஹாசன் இனிமேல் என்னுடன் வந்து தங்கி இருப்பாரா? என்று கேட்கிறார்கள். இல்லை... ஸ்ருதி என்னுடன் தங்க மாட்டார்.

நச்சரிக்கக் கூடாது
ஸ்ருதிக்கு அவரது தொழில் முக்கியம். படப்பிடிப்புக்காக வெளியூர்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது. பிள்ளைகள் வளர்ந்ததும் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். அவர்களிடம் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தலாம். ஆனால் நம் பிடிக்குள் வைத்துக் கொள்ள முயற்சிக்கக் கூடாது. தேவையில்லாமல் நச்சரிக்கக் கூடாது!" என்றார்.


Click it and Unblock the Notifications











