தனது காதலரை அறிமுகப்படுத்திய பிரபல நடிகை.. விரைவில் நிச்சயதார்த்தம்.. டிசம்பரில் திருமணம்!
சென்னை: பிரபல நடிகை வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.
Recommended Video
தமிழில் துஷ்யந்த் ஜோடியாக மச்சி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சுபா புஞ்சா.
இந்த படம் 2004 ஆம் ஆண்டு வெளியானது. இதையடுத்து 'திருடிய இதயத்தை', 'ஒரு பொண்ணு ஒரு பையன்', 'சுட்ட பழம்' ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

வாய்ப்புகள் இல்லை
பெங்களூரைச் சேர்ந்த சுபா புஞ்சாவுக்குத் தமிழில் தொடந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து சொந்த மொழியான கன்னடப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அங்கு அவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. முன்னணி கன்னட ஹீரோக்களுடன் நடித்த சுபா புஞ்சாவுக்கு கடந்த சில வருடங்களாக அங்கும் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

சுமந்த் பில்லவா
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் இப்போது தனது இன்ஸ்டாகிராமில் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது தனது காதலர் சுமந்த் பில்லவா (sumanth billava) என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:

ஊரடங்கு முடிந்ததும்
'நான் திருமணம் செய்துகொள்ள இருக்கும் சுமந்த் பில்லவா பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு நாள் தாமதமாக இதைப் பகிர்கிறேன் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் இதுதான் விஷயம். ஊரடங்கு முடிந்ததும் அநேகமாக டிசம்பர் மாதம் எங்கள் திருமணம் நடக்கும் என்று கூறியுள்ளார். அதோடு தனது காதலருடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

நிச்சயதார்த்தம்
சுமந்த் பில்லாவா, தொழிலதிபராக இருக்கிறார். விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது. இதுபற்றி சுபா புஞ்சா அளித்துள்ள பேட்டியில், சினிமா துறையில் இல்லாத ஒருவர், எனக்கு கணவராக வர வேண்டும் என்று நினைத்தேன். அதே போல இவர் கிடைத்தார். இவர் என் வேலையை புரிந்துகொள்கிறார்.

திருமணத்துக்குப் பிறகு
எங்கள் உறவை பற்றி நாங்கள் உறுதியான முடிவு எடுத்தபின் பெற்றோரிடம் அனுமதி கேட்டோம். இரண்டு குடும்பத்திலும் சம்மதம் தெரிவித்தனர். திருமணத்துக்குப் பிறகும் நடிப்பதற்கு அனுமதிக் கொடுத்திருக்கிறார் சுமந்த். எங்கள் திருமணத்துக்கு அனைவரும் அழைக்கப்படுவார்கள். இவ்வாறு சுபா புஞ்சா கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











