மீண்டும் நடிக்க முடியுமானு தெரியல.. அதற்காக எடுத்த முடிவு தான் இது.. சமந்தா வேதனை!

சென்னை: நடிகையாக ஜொலித்துக்கொண்டு இருந்த சமந்தா, தற்போது தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். இவர் தயாரித்து இருக்கும் முதல் படமான 'சுபம்' மே 9ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை சமந்தா, என்னால் படங்களில் நடிக்க முடியவில்லை, மீண்டும் நடிக்க முடியுமானு தெரியவில்லை என்று வேதனையுடன் பேசி உள்ளார். இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் படு பிஸியாக நடித்து வந்த சமந்தா, அறியவகை நோயால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, சினிமாவில் இருந்து ஒதுங்கி தற்போது ஓய்வில் இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு 'ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். பொதுவாக நடிகர்கள் தான் தயாரிப்பில் ஈடுபடுவார்கள். ஆனால், சமந்தாவிற்கு சினிமாவின் மீது இருக்கும் காதலால், தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, அதில் தரமான படங்களை கொடுப்பேன் என்று கூறியிருந்தார்.

சுபம் : சமந்தாவின் தயாரிப்பு நிறுவனமான 'ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ்' சுபம் என்ற படத்தை முதன் முதலில் தயாரித்துள்ளது. 'சுபம்' என பெயரிடப்பட்ட இந்த தெலுங்கு படம் வருகின்ற மே 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தை பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கி உள்ளார். இதில், ஹர்ஷித் மல்கிரெட்டி, ஷாலினி கொண்டேபுடி, ஷ்ரியா கொந்தம், ஷ்ரவாணி, சரண் பெரி மற்றும் கவிரெட்டி ஸ்ரீனிவாஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஹாரர் காமெடி படமாக உருவாகி உள்ள இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி விசாகப்பட்டிணத்தில் நடைபெற்றது. அதில், நடிகை சமந்தா கலந்து கொண்டு பேசினார்.

samantha speech

நடிக்க முடியுமானு தெரியல: வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க வேண்டிய சூழலுக்குத் நாம் தள்ளப்படும் போது தான், வாழ்க்கையில் எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும். நான் சினிமாவை விட்டு ஓய்வில் இருந்த போது தான் நிறைய விஷயத்தை யோசித்தேன். என்னால் படத்தில் நடிக்க முடியவில்லை, மீண்டும் நடிக்க முடியுமா? என்று கூட எனக்கு தெரியவில்லை. ஆனால், எனக்கு சினிமாவைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அப்போது தான் தயாரிப்பாளராகளாம் என்கிற எண்ணம் வந்தது. நான் சினிமாவில் 15 ஆண்டுகளாக இருக்கிறேன். இந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஒரு சினிமா நடிகையாக நான் கற்றுக் கொண்டதை விட, தயாரிப்பாளராக பல விஷயத்தை கற்றுக் கொண்டேன். இன்னும் பல விஷயத்தை கற்றுக் கொள்வதற்காக காத்துஇருக்கிறேன் என பேசி இருந்தார்.

அதில், நிகழ்ச்சியின் போது, சமந்தா அடிக்கடி கண்களை துடைத்துக் கொண்டே இருந்தால், அவர் உணர்ச்சி வசப்பட்டு அழுகிறார் என்று செய்தி பரவியது. அதற்கு பதில் அண்மையில் பதில் அளித்திருந்த சமந்தா,நான் மேடையில் கண்கலங்கி துடைப்பதற்கு காரணம் உணர்ச்சிவசப்பட்டு இல்லை. பிரகாசமான விளக்குகளை பார்க்கும்போது என் கண்கள் கூசுவதால், கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது. அதனாலே நான் அடிக்கடி கண்களை துடைக்கிறேன். நான் மேடைகளில் உணர்ச்சி வசப்பட்டு அழவில்லை, நான் நன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீங்கள் என் மீது வைத்து இருக்கும் அன்புக்கு நன்றி என்றார்.

FAQs
நடிகை சமந்தாவின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் என்ன?

நடிகை சமந்தாவின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் "ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ்" 

Filmibeat Entertainment

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X