Shubman Gill: ஸ்பைடர் மேனாக மாறிய சுப்மன் கில்.. அடுத்து ஹீரோவாகவும் நடிக்கப் போறாரா?

மும்பை: ஐபிஎல் 2023ல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் சுப்மன் கில்லுக்கு சினிமாவில் அதிக ஆர்வம் வந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான், ஸ்ரீசாந்த் உள்ளிட்ட பல பிரபல கிரிக்கெட் வீரர்கள் தமிழ் சினிமாவிலேயே நடித்துள்ளனர்.

தோனி தமிழில் எல்ஜிஎம் படத்தை ஹரீஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபுவை வைத்து தயாரித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர்களுக்கு சினிமா ஆசை: சினிமா நடிகர்கள் செலிபிரிட்டி கிரிக்கெட் ஆடி வரும் நிலையில், கிரிக்கெட் வீரர்களுக்கு சினிமாவில் நடிக்க எப்பவுமே ஒரு தனிப்பட்ட ஆசை இருக்கத்தான் செய்கிறது.

Shubman Gill shows his interest towards Cinema and soon he will debut as hero talks trending

ஸ்டார் பிளேயர்கள் ஆனதுமே சச்சின் முதல் விராட் கோலி வரை விளம்பரத்திலேயே நடித்து வருகின்றனர். இந்நிலையில், இளம் வீரரான சுப்மன் கில்லுக்கும் சினிமாவில் நடிக்கும் ஆசை ஹெவியாக எழுந்துள்ளதாக கூறுகின்றனர்.

சதமடித்து அசத்தல்: இறுதிப்போட்டிக்கு நுழைவதற்கான பலப்பரீட்சை ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்து சரித்திர சாதனை படைத்தார் சுப்மன் கில். 129 ரன்கள் விளாசிய சுப்மன் கில்லை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே பாராட்டித் தள்ளியது.

சச்சின் முதல் கோலி வரை பலரும் சுப்மன் கில்லை பாராட்டிய நிலையில், இறுதிப்போட்டியில் சென்னைக்கு எதிராக பெரிய ஆட்டத்தை அவர் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விரைவிலேயே விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

ஸ்பைடர்மேன் படத்துக்கு டப்பிங்: விரைவில் வெளியாக உள்ள "Spider-Man: Across the Spider-Verse" அனிமேஷன் படத்தின் இந்தி வெர்ஷனுக்கு சுப்மன் கில் தான் ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார்.

Shubman Gill shows his interest towards Cinema and soon he will debut as hero talks trending

கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்தி வந்த சுப்மன் கில் தனக்கு மிகவும் பிடித்த சூப்பர் ஹீரோ படம் ஸ்பைடர்மேன் தான் என்றும் ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்துக்கு குரல் கொடுக்க வாய்ப்பு கதவை தட்டிய நிலையில், உடனடியாக ஓகே சொல்லி விட்டேன் என்றார்.

ஹீரோவாகும் சுப்மன் கில்: கிரிக்கெட்டில் இளம் வீரராக அசத்தி வரும் சுப்மன் கில் வெறும் டப்பிங்குடன் நிறுத்தி விட மாட்டார் என்றும் சீக்கிரமே சினிமாவில் ஹீரோவாக அசத்தல் என்ட்ரி கொடுக்கப் போகிறார் என்றும் அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X