twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல் முறையாக அப்பாவிடம் உதவி கேட்டேன்.. நெப்போடிசம் குறித்தும் கருத்து தெரிவித்த ஸ்ருதிஹாசன்!

    |

    மும்பை: நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள 'யாரா' திரைப்படம் விரைவில் ரிலீசாகிறது.

    அதுதொடர்பான பேட்டி ஒன்றில், அந்த படம் குறித்தும், நெப்போடிசம் குறித்தும் நடிகை ஸ்ருதிஹாசன் மனம் திறந்து பேசியுள்ளார்.

    சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தை தொடர்ந்து, பாலிவுட்டில் வாரிசு நடிகர்களை புறக்கணிக்க வேண்டும் என்கிற கருத்து வெடித்துள்ள நிலையில், ஸ்ருதிஹாசன் அது தொடர்பாக பேசியுள்ளார்.

    கையெடுத்து கும்பிட்டு நன்றி.. ஹார்ட்டின் ஷேப்பில் அன்பு.. ஐஸ்வர்யா ராயின் உருக்கமான பதிவு! கையெடுத்து கும்பிட்டு நன்றி.. ஹார்ட்டின் ஷேப்பில் அன்பு.. ஐஸ்வர்யா ராயின் உருக்கமான பதிவு!

    நேரடியாக ஆன்லைனில்

    நேரடியாக ஆன்லைனில்

    துப்பாக்கி பட வில்லனும் பாலிவுட் ஹீரோவுமான வித்யூத் ஜமால் நடிப்பில் உருவாகி உள்ள யாரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் வைரலான நிலையில், இந்த படம் வரும் ஜூலை 30ம் தேதி (நாளை) ஜி5 ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியாகிறது.

    வயதான பெண்

    வயதான பெண்

    70களை சேர்ந்த பெண்ணாகவும், வயது முதிர்ந்த தோற்றத்திலும் இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் திக்மான்சு இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் ஆக்‌ஷன் திரில்லராக உருவாகி இருக்கிறது. வித்யூத் ஜமால், அமித் சாத், விஜய் வர்மா மற்றும் கென்னி பசுமதாரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    அப்பாவிடம் உதவி கேட்டேன்

    அப்பாவிடம் உதவி கேட்டேன்

    இதுவரை எந்த படத்திற்காகவும், தந்தை கமல்ஹாசனிடம் தான் உதவி கேட்டது இல்லை என்றும், முதல் முறையாக இந்த படத்தில் வயதான பெண்ணாக நடிக்க வேண்டும் என்பதற்காக அப்பாவிடம் உதவி கேட்டேன். அவர் சில டிப்ஸ்களை கொடுத்தார். 50 வயதில் என் அம்மா சரிகா, 30 வயது பெண் போலத்தான் இருப்பார், அதனை இன்ஸ்பயராக கொண்டே இந்த கதாபாத்திரத்தை தான் ஏற்று நடித்ததாக ஸ்ருதி கூறியுள்ளார்.

    அது ஒரு சாவி மட்டும் தான்

    அது ஒரு சாவி மட்டும் தான்

    நெப்போடிசம் தொடர்பான கேள்விக்கு, தற்போது ஏன் இது கேட்கப்படுகிறது என்பதை அறிவேன், நான் எப்போதுமே சொல்வது போல, நெப்போடிசம் சினிமாவில் நுழைய ஒரு சாவியாக மட்டுமே இருந்தது. லண்டனில், இசை நிகழ்ச்சி நடத்த நான் பாடுபட்ட போது தனக்கு யாருமே தெரியாது என்றும், அங்கே இசைக் கச்சேரியை நடத்தி பாராட்டுக்களை பெற்ற போது தான் திறமைக்கான வலிமையை உணர்ந்தேன் எனக் கூறியுள்ளார்.

    அப்பாவின் நண்பர்

    அப்பாவின் நண்பர்

    உண்மையை சொல்ல வேண்டும் என்றால், லாபம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போல, வேறு எந்த செட்டிலும் அவ்வளவு சந்தோஷமாக உணர்ந்தது இல்லை. எஸ்.பி. ஜனநாதன், தந்தையின் நீண்ட கால நண்பர், சமூக சிந்தனைகளுடன் படம் எடுப்பதில் மிகவும் திறமை வாய்ந்தவர், விஜய்சேதுபதி உடன் இணைந்து நடித்துள்ள அந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

    English summary
    Shruti Haasan’s movie Yaara will release on July 30th on Zee 5 OTT Platform. She talks about nepotism in her recent interaction.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X