»   »  என் மகள் நடிகையாக வேண்டாம்: சூப்பர் ஸ்டார் மகள் ஓபன் டாக்

என் மகள் நடிகையாக வேண்டாம்: சூப்பர் ஸ்டார் மகள் ஓபன் டாக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது மகள் நவ்யா நடிகையாவதை விரும்பவில்லை என்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா பச்சன் நந்தா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதாவின் மகள் நவ்யா நவேலி நந்தா ஏற்கனவே பிரபலம். லண்டனில் படிக்கும் நவ்யா விதவிதமாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

நவ்யா நடிகையாகக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து ஸ்வேதா மும்பையில் நடந்த ஐஸ்வர்யா தனுஷின் புத்தக வெளியீட்டு விழாவில் கூறுகையில்,

 நவ்யா

நவ்யா

என் மகள் நடிகையாக வேண்டும் என்று கூறினால் நான் கவலைப்படுவேன். ஏனென்றால் நடிகையாக இருப்பது அவ்வளவு எளிது இல்லை. கடினமாக உழைக்க வேண்டும். அதிலும் பெண்ணாக இருந்தால் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்.

 தோல்விகள்

தோல்விகள்

திரையுலகில் நிறைய தோல்விகள் உள்ளது. அது யார் கண்ணுக்கும் தெரிவது இல்லை. படத்திற்காக நடிப்பதை மக்கள் பொது இடத்தில் விமர்சிப்பார்கள்.

 ஜெயா பச்சன்

ஜெயா பச்சன்

நடிகையாக என் அம்மா ஜெயா போன்று முறையாக தயாராக வேண்டும். என் தந்தை போன்று தடுமாறக் கூடாது. என் அம்மா தான் அவர்கள் வீட்டில் மூத்த பெண். படித்து முடித்த பிறகு நடிகையாக வேண்டும் என்ற தனது விருப்பத்தை அவரின் தந்தையிடம் தெரிவித்தார்.

 நடிப்பு

நடிப்பு

என் அம்மா நடிப்பு பள்ளியில் சேர்ந்து நடிப்பில் கற்றுத் தேர்ந்தார். இது தான் நடிகையாக முறையாக செய்ய வேண்டியது. நடிக்க வந்தவுடனே புகழும், பணமும் வந்துவிடாது.

English summary
She may come from a family of Bollywood stars but Shweta Bachchan Nanda says she would be worried if her daughter Navya Naveli plans to be an actor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil