இயக்குனரை திருமணம் செய்த நடிகை: காரணம் 'இமைக்கா நொடிகள்' வில்லன்

By Siva

Recommended Video

நடிகை ஸ்வேதா பாசு இயக்குனர் ரோஹித் கல்யாண ஆல்பம்- வீடியோ

மும்பை: நடிகை ஸ்வேதா பாசு தனது காதலர் ரோஹித் மிட்டலை திருமணம் செய்து கொண்டார்.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்தவர் நடிகை ஸ்வேதா பாசு பிரசாத். வளர்ந்த பிறகு தமிழ், தெலுங்கு, பெங்காளி, கன்னடம், இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.

அவர் இயக்குனர் ரோஹித் மிட்டலை காதலித்து வந்தார்.

 திருமணம்

திருமணம்

ரோஹித் மிட்டலும், ஸ்வேதா பாசுவும் தங்களின் காதல் குறித்து பெற்றோரிடம் தெரிவித்து சம்மதம் பெற்றனர். இதையடுத்து அவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். 4 ஆண்டுகள் காதலித்த பிறகு அவர்கள் திருமணம் செய்துள்ளனர். அவர்களுக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 ஸ்வேதா

ஸ்வேதா

ஆண் தான் முதலில் காதலை சொல்ல வேண்டும் என்ற காலம் மலையேறிவிட்டது. கோவாவுக்கு சென்ற இடத்தில் ஸ்வேதா தான் ரோஹித்திடம் தனது காதலை முதலில் கூறினார். அதன் பிறகு ரோஹித் தனது சொந்த ஊரான புனேவில் வைத்து திருமணம் பற்றிய பேச்சை எடுத்தார் என்று அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

 ரோஹித்

ரோஹித்

முன்னதாக ஸ்வேதா கூறியதாவது, நானும், ரோஹித்தும் காதலிக்கிறோம், எங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நாங்கள் பேச விரும்புவது இல்லை என்றார். ஃபேன்டம் பிலிம்ஸில் இயக்குனர் ரோஹித் மிட்டலை சந்தித்து காதலில் விழுந்தார் ஸ்வேதா. அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட இயக்குனரும், நடிகருமான அனுராக் பாஸு காரணம் என்று கூறப்படுகிறது.

 படிப்பு

படிப்பு

படங்களில் இருந்து குட்டி பிரேக் எடுத்த ஸ்வேதா படிப்பில் கவனம் செலுத்தினார். முன்னதாக அவர் ஹைதராபாத்தில் உள்ள பெரிய ஹோட்டலில் விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டார். 2 மாதங்கள் மறுசீரமைப்பு மையத்தில் தங்கியிருந்தார். தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று அவர் தொடர்ந்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X