பாகுபலி, காக்கா முட்டை.... தென்னிந்திய சினிமா சரியான பாதையில் போகிறது!- ஷ்யாம் பெனகல்

By Shankar

பாகுபலி, காக்கா முட்டை போன்ற படங்களைப் பார்க்கும்போது, தென்னிந்திய சினிமா சரியான பாதையில் போவதாக உணர்கிறேன், என்று பாராட்டு தெரிவித்துள்ளார் தேசிய விருது பெற்ற இயக்குநர் ஷ்யாம் பெனகல்.

கொச்சியில் நடந்த ஆல் லைட்ஸ் இந்தியா சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற அவர் கூறுகையில், "ஒரு கட்டத்தில் சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்தியப் படங்களுக்கு இடமே இல்லை என்ற நிலை உருவாவிட்டது. உலகளவில் புகழ்பெற்ற திரைப்பட விழாக்களில் ஒரு இந்தியப் படமாவது இடம் பெறுமா என்ற கேள்வி இருந்தது.

Shyam Benegal prouds on South Indian Cinema like Bahubali, Kaakka Muttai

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அந்த நிலையை மாற்றிவிட்டன தென்னிந்திய மொழிப் படங்கள். சர்வதேச சந்தையை குறிவைத்து வெளியாகின்றன. நல்ல வசூலையும் பெறுகின்றன.

பாகுபலி, காக்கா முட்டை போன்ற படங்களைப் பார்த்தபோது, தென்னிந்திய சினிமா சரியான பாதையில் போவதை உணர முடிந்தது.

இந்தியாவில் திரைப்பட விழா கலாச்சாரம் இன்னும் அதிகமாக வேண்டும். நம் நாட்டில் தயாராகும் படங்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால், அதைத் தாண்டிய உலக சினிமா தெரியாமல் போய்விடும். சர்வதேசப் படங்களைப் பார்த்தால்தான், நமது சினிமா கலைஞர்களின் பார்வை விரிவடையும்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X