கொழுந்து விட்டு எரியும் சூலம்.. மூக்குத்தி அம்மனுக்கு போட்டியாக களமிறங்குறாரா சாய் பல்லவி?
சென்னை: நடிகை சாய் பல்லவியின் 29வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் கலக்கி வரும் நடிகை சாய் பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் நானி வெளியிட்ட ஷியாம் சிங்கா ராய் படத்தின் போஸ்டர் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
கையில் கொழுந்து விட்டு எரியும் சூலத்துடன் படுபயங்கரமாக நடிகை சாய் பல்லவி போஸ் கொடுத்துள்ளார்.

பர்த்டே பேபி
ரெளடி பேபியாக கலக்கிய சாய் பல்லவி இன்று பர்த்டே பேபியாக தனது 29வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். நடிகை சாய் பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை சாய் பல்லவிக்கு தெரிவித்துள்ளனர்.

எரியும் சூலம்
நடிகர் நானி, சாய் பல்லவி நடிப்பில் உருவாகி உள்ள ஷியாம் சிங்கா ராய் படத்தில் இருந்து சாய் பல்லவியின் ஃபர்ஸ்ட் லுக்கை அவரது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் நானி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு நடிகை சாய் பல்லவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மூக்குத்தி அம்மனுக்கு போட்டியா
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் சூலம் ஏந்தி அம்மனாக நடித்து கலக்கி இருந்தார் நயன்தாரா. இந்நிலையில், அவருக்கு போட்டியாக சூலம் ஏந்தி படு பயங்கரமான போஸ் கொடுத்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளார் சாய் பல்லவி.

சூலம் ஏன்
மேற்கு வங்கத்தை மையமாக வைத்து இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டு வருகிறது. இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் துர்கா பூஜையை முன்னிட்டு வரும் பாடல் காட்சி ஒன்றில் இப்படியொரு காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கீர்த்தி ஷெட்டி
சாய் பல்லவி மட்டுமின்றி விஜய்சேதுபதி மலையாளத்தில் வில்லனாக நடித்த உபென்னா படத்தில் நாயகியாக நடித்து இளைஞர்களை கவர்ந்துள்ள நடிகை க்ரித்தி ஷெட்டியும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், பிரேமம் படத்திற்கு பிறகு மீண்டும் சாய் பல்லவியுடன் மடோனா சபாஸ்டியனும் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

ரிலீசாகவில்லை
கடந்த ஏப்ரல் மாதமே நடிகை சாய் பல்லவியின் லவ் ஸ்டோரி மற்றும் விராட பர்வம் உள்ளிட்ட படங்கள் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், கொரோனா இரண்டாம் அலை காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சாய் பல்லவி நடிப்பில் உருவாகி உள்ள அந்த இரண்டு படங்களும் ரிலீசாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











