விஜய் சேதுபதியை பிடிக்கும்..ஆனா தமிழ்ப்படம் இயக்க மாட்டேன்..ஷ்யாம் சிங்கா ராய் இயக்குநர் திட்டவட்டம்

ஐதராபாத் : தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் ஷ்யாம் சிங்கா ராய்.

Recommended Video

Sai Pallavi தோற்றத்தை கேலி செய்த Netizen, Pallavi-க்கு ஆதரவாக பேசிய Telungana ஆளுனர்

நானி, சாய் பல்லவி லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தை இயக்கியுள்ளார் ராகுல் சங்கிருத்யன்.

இந்நிலையில் தமிழில் படம் இயக்குவது குறித்து அவர் மனம் திறந்துள்ளார்.

ஷ்யாம் சிங்கா ராய் படம்

ஷ்யாம் சிங்கா ராய் படம்

நடிகர் நானி, சாய் பல்லவி லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த டிசம்பர் 24ம் தேதி கிறிஸ்துமசையொட்டி வெளியான படம் ஷ்யாம் சிங்கா ராய். இந்தப் படத்தில் இரட்டை கெட்டப்புகளில் மிரட்டியுள்ளார் நானி. படத்தை இயக்கியுள்ளார் ராகுல் சங்கிருத்யன்.

அழகான சாய் பல்லவி

அழகான சாய் பல்லவி

படத்தில் தேவதாசி முறையை கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர். படத்தில் அழகாக வருகிறார் சாய் பல்லவி. தன்னுடைய நடனத்திறமையை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பை அழகாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். இதேபோல மற்றொரு கதாநாயகியாக வரும் கீர்த்தி ஷெட்டியும் அதகளப்படுத்துகிறார்.

கவிதையான காதல்

கவிதையான காதல்

படத்தில் மிகப்பெரிய பலமாக வசனங்கள், ஒளிப்பதிவு, இசை, பாடல்வரிகள் என பல விஷயங்களை சொல்லலாம். நானி -சாய் பல்லவியின் காதல் கவிதையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு ஒளிப்பதிவாளர் சானு சான் வர்கீசுக்கு கண்டிப்பாக ஓ போடலாம்.

தமிழ் படம் இயக்கமாட்டேன்

தமிழ் படம் இயக்கமாட்டேன்

இந்நிலையில் சமீபத்திய பேட்டியொன்றில் பேசியுள்ள படத்தின் இயக்குநர் ராகுல் சங்கிருத்யன் தனக்கு தமிழ் தெரியாது எனவும் முதலில் தமிழ் கற்றுக் கொண்டு பின்புதான் படம் எடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். அப்படி இல்லையென்றால் அந்த மொழியுடன் கனெக்ட் ஆக முடியாது என்றும் கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி, சூர்யாவை பிடிக்கும்

விஜய் சேதுபதி, சூர்யாவை பிடிக்கும்

ஆனால் தான் தமிழ் படங்களுக்கும் தமிழ் நடிகர்களுக்கும் மிகப்பெரிய ரசிகன் என்றும் நடிகர் விஜய் சேதுபதியின் மிகப்பெரிய ரசிகன் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் நடிகர் சூர்யாவையும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

சாய் பல்லவி பெஸ்ட் சாய்ஸ்

சாய் பல்லவி பெஸ்ட் சாய்ஸ்

இந்தப் படத்தில் சாய் பல்லவி கேரக்டரில் நடிக்க அவரைத் தவிர வேறு சாய்ஸ் தனக்கு தேவைப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சாய் பல்லவிக்கு நம்முடைய பாரம்பரிய நடனம் சிறப்பாக ஆடத் தெரிவது போல அவருக்கு சிறப்பாக நடிக்கவும் தெரிந்திருப்பதே இந்த கேரக்டரில் அவரை தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து டைம் டிராவல் படம்

அடுத்து டைம் டிராவல் படம்

அடுத்ததாக டைம் டிராவலை மையமாக கொண்டு படத்தை இயக்கவுள்ளதாகவும மனித மன உணர்வுகளை மையமாக கொண்டு மேலும் பல படங்களை எடுக்க விரும்புவதாகவும் ராகுல் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மேலும் ஆழமான கருத்துக்களுடன் படம் செய்யவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X