ஷியாம் & சூர்யாவின் பொங்கல் ஸ்பெஷல் கச்சேரி.. நேர்காணலில் அசத்தலான இசை!
சென்னை: வருடந்தோறும் பொங்கலை முன்னிட்டு ஷியாம் & சூர்யா ஆகியோரின் கச்சேரி நடக்கும்.
இந்த லாக்டௌனிலும் virtual முறையில் இசை கச்சேரிகள் நடத்தி ரசிகர்களை மகிழ்வித்தனர்.
அது குறித்தும், பொங்கல் ஸ்பெஷல் கச்சேரியையும் நேர்காணலில் நமக்கு தந்து அசத்தியுள்ளனர்.

பாரம்பரிய இசை
பொங்கலுக்கு அனைவருக்கும் விருப்பமான பாடலென்றால் இளையராஜா இசையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த மகாநதி படத்தில் இருந்து "பொங்கலோ பொங்கல்" பாடல் தான். அதற்கு அசத்தலாக டியூன் போட்டு ரசிகர்களுக்கு நினைவுகளை மூட்டியுள்ளனர் ஷியாம் & சூர்யா.

பிரபலமான பாடல்
பின்னர் துள்ளலான இசையை ரசிகர்களுக்கு கொடுக்கும் வகையில் மீண்டும் இளையராஜா இசையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் இருந்து "அண்ணாத்த ஆடுறார்" பாடலின் டியூனை அற்புதமாக போட்டு பார்வையாளர்களை குஷி படுத்தியுள்ளனர்.

குட்டி ஸ்டோரி
இரண்டு கமல் பாடல்களை தொடர்ந்து பிற ரசிகர்களையும் கவரும் வகையில் நேர்காணலில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் மாஸ்டர் படத்தில் அனிருத் இசையில் தளபதி விஜய் நடிப்பில் இருந்து "குட்டி ஸ்டோரி" பாடலின் ட்யூனை இசைத்து அசத்தினர் ஷியாம் & சூர்யா.

கொரோனாவிலும் வயலின்
கொரோனா தொற்றினால் லாக் டௌன் தொடங்கிய போது தினமும் இன்ஸ்டாகிராமில் லைவ் வந்து நாட்களை கடத்தியதாகவும், பின்னர் தனக்கு கொரோனா வந்த போதும் தொடர்ந்து வயலின் வாசித்ததாகவும் நேர்காணலில் கூறியுள்ளார் ஷியாம்.


Click it and Unblock the Notifications











