45 வயசு ஆச்சு.. பிரபாஸின் திருமணம் பற்றிய கேள்வி.. அப்படி இப்படி சுற்றி பதில் சொன்ன பெரியம்மா!

சென்னை: திரையுலகில் திருமணங்கள், விவாகரத்துகள், கர்ப்பம் என பலவிதமான செய்திகள் வந்தாலும் அதில் எதிலும் இல்லாத ஆர்வம், நடிகர் பிரபாஸின் திருமணம் எப்போது என்று தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். பான் ஸ்டார் நடிகரான பிரபாஸின் திருமணம் எப்போது நடக்கும் என்பது பலரும் கேட்கும் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

அவ்வப்போது நடிகர் பிரபாஸின் திருமணம் குறித்த வதந்திகள் வந்தாலும், அவை அனைத்தும் வெறும் யூகங்களாகவே இருக்கின்றன. கிருஷ்ணம் ராஜுவின் வாரிசான பிரபாஸ் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமாகி, படிப்படியாக உயர்ந்து இன்று பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்துள்ளார். இந்தியத் திரையுலகில் வேறு எந்த நடிகருக்கும் இல்லாத அளவுக்கு பிரபாஸுக்கு மார்க்கெட்டும், ரசிகர் பட்டாளமும் உள்ளது.

prabhas marriage
Photo Credit:

நடிகர் பிரபாஸ்: கடந்த ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான 'கல்கி 2898 AD' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அடைந்தது. அண்மையில் வெளியாக கண்ணப்பா திரைப்படத்தில் 'ருத்ரா' கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். தற்போது 'தி ராஜா சாப்', 'சலார் 2', 'கல்கி 2', 'ஸ்பிரிட்', 'ஃபவுஜி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல புதிய படங்களுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

50 வயசு ஆச்சு: திரைத்துறையில் உச்சத்தில் இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் பிரபாஸ் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிக்கிளாகவே உள்ளார். 50 வயது நெருங்கும் நிலையிலும், திருமணம் பற்றி அவர் இதுவரை வாய் திறக்கவில்லை. இதனால், பிரபாஸின் திருமணம் குறித்து பல்வேறு யூகங்கள் ஊடகங்களில் சில நடிகைகளுடன் பிரபாஸுடன் தொடர்பு படுத்தி செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, நடிகை அனுஷ்கா ஷெட்டியுடன் பிரபாசும் காதலித்து வந்ததாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்தி பரவியது. ஆனால், நாங்கள் நண்பர்கள் மட்டும் தான் என பிரபாஸும், அனுஷ்காவும் பலமுறை விளக்கம் அளித்தனர்.

எல்லாம் வதந்தி: அண்மையில், ஆந்திராவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மகளுடன் பிரபாஸுக்குத் நிச்சயிக்கப்பட்டதாகவும், விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் செய்திகள் வெளியானது. இந்தத் திருமண ஏற்பாடுகளை பிரபாஸின் பெரியம்மா சியாமளா தேவி ரகசியமாகச் செய்து வருவதாகவும் வதந்திகள் பரவியது கடைசியில் அது வெறும் வதந்தி என தெரியவந்தது.

சிவன் அருள் கிடைத்தால் திருமணம்: தற்போது, பிரபாஸின் திருமணம் குறித்து அவரது பெரியம்மா சியாமளா தேவி பரபரப்பான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். தனது குடும்பத்தினருடன் திராக்ஷாராமத்தில் உள்ள பீமலிங்கேஸ்வர சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்தார். அப்போது செய்தியாளர்கள் பிரபாஸின் திருமணம் குறித்துக் கேட்டபோது, பிரபாஸின் திருமணம் எப்போது என்று அனைவரும் காத்திருக்கிறார்கள். எங்கள் நிலையும் அதுவே. பிரபாஸுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நாங்கள் மனதார விரும்புகிறோம்.

இந்த ஆண்டே திருமணம் நடக்குமா என்று கேட்டால், அதைச் சொல்ல முடியாது. சிவனின் அருள் இல்லாமல் பிரபாஸுக்குத் திருமணம் நடக்காது. சிவன் எப்போது அருளுகிறாரோ, அப்போதுதான் திருமணம் நடக்கும். பெண் சினிமாத்துறையை சேர்ந்தவரா.. இல்லை வேறு துறையை சேர்ந்தவரா என்பது இறைவனின் சித்தம். ஆனால், திருமணம் நிச்சயம் நடக்கும் என்று சியாமளா தேவி உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதனால், பிரபாஸின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X