Just In
- 1 min ago
நண்பர்களுடன் முகத்தை மூடியபடி ஊர் சுற்றிய பிரபல நடிகை.. ஆனாலும் நம்ம மக்கள் கண்டுபிடிச்சுட்டாங்களே!
- 12 min ago
இப்படியே போயிட்டிருந்தா எப்படி? 4 வது பாகத்துக்கும் சல்மான் ரெடியாம்...
- 19 min ago
பெட்டில் செம ஹாயாக போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்.. தீயாய் பரவும் போட்டோ.. விளாசும் நெட்டிசன்ஸ்!
- 1 hr ago
தமிழ்ல நான் பட்ட பாடு இருக்கே...ஐயையோ... விரக்தியில் ஹீரோயின்!
Don't Miss!
- Automobiles
விலை குறைவான புதிய சொகுசு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்!
- Technology
பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் புதய சலுகை: 1095ஜிபி டேட்டா: என்ன திட்டம்? வேலிடிட்டி?
- News
வயலில் கிடந்த கவுசிகா சடலம்.. பைக்கில் மர்ம நபர்.. வீடியோ காலில் பேசியது யாருடன்.. பரபரக்கும் சேலம்
- Finance
28 நாளில் ரூ.104 கோடி வசூல்.. சபரிமலையில் கொட்டும் வருமானம்..!
- Lifestyle
காலை நேர உடற்பயிற்சி Vs மாலை நேர உடற்பயிற்சி - இரண்டில் எது சிறந்தது?
- Sports
என்ன திட்டு திட்டுனீங்க? இப்ப பேசுங்க பார்ப்போம்.. செம பதிலடி கொடுத்த இளம் வீரர்!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எஸ்.ஐ. மனோஜ் தான் என் குடும்பத்தை நாசமாக்கிட்டார்: தாடி பாலாஜி பரபரப்பு புகார்
சென்னை: காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் என் குடும்பத்தை நாசமாக்கிவிட்டார் என்று தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.
தாடி பாலாஜி தன்னை அடித்ததுடன், கொலை மிரட்டல் விடுப்பதாக நித்யா மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்பொழுது அவர் நித்யா பற்றி கூறியிருப்பதாவது,

குடும்பம்
காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் என் குடும்பத்தை நாசமாக்கிவிட்டார். என் மன உளைச்சலுக்கு அவர் தான் காரணம். அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். நித்யா எங்கள் மகளை பகடைக்காயாக பயன்படுத்துகிறார். மகளின் கல்விச் செலவை ஏற்க நான் தயார். அவரை நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க தயார். ஆனால் நித்யா என் மகளை பார்க்க அனுமதிப்பது இல்லை.

அரசியல்
தேர்தலில் நிற்பேன் என்கிறார் நித்யா. முதலில் அவர் வீட்டில் நிற்கட்டும். குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியாத நித்யாவுக்கு நாட்டை பற்றி என்ன தெரியும், இல்லை அரசியலை பற்றி தான் அவருக்கு என்ன தெரியும். நித்யாவின் வளர்ச்சியை பார்த்து நான் பொறாமைப்பட அவர் என்ன முதல்வர் வேட்பாளராகவா அறிவிக்கப்பட்டுள்ளார்.

நித்யா
என் வேலை காரணமாக நான் பிசியாக இருப்பதால் கிடைத்த சுதந்திரத்தை நித்யா தவறாக பயன்படுத்திக் கொண்டார். அது ஏன் என்று நான் கேட்பதில் என்ன தவறு. நித்யாவால் பெண்கள் அமைப்புக்கு கேவலம். நித்யாவின் பின்னால் இருப்பது மனோஜ் தான்.

கமல் ஹாஸன்
நித்யா பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் நான் நேராக என் அம்மா வீட்டிற்கு சென்றேன். நித்யாவை பார்க்கவில்லை. அவர் பொய் பேசுகிறார். பணத் தேவைக்காக மட்டுமே நித்யா என்னிடம் பேசினார். என் வாழ்வில் நடப்பது பற்றி கமல் சாருக்கு தெரியும். கமல் சாரிடம் கூறிவிட்டு தான் செய்தியாளர்களை சந்திக்க வந்தேன் என்று தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.
கொண்டாட வேண்டிய நேரத்தில் சமந்தாவுக்கும், த்ரிஷாவுக்கும் வந்த பிரச்சனை