குணா படத்தை இந்த இயக்குநர் தான் இயக்கியிருக்க வேண்டியதா?.. கமலை அப்செட் செய்த அந்த பிரபலம் யார்?
சென்னை: கமல்ஹாசன் நினைத்தது போல அந்த பிரபல மலையாள இயக்குநர் அந்த படத்தை இயக்கி இருந்தால் அப்போதே அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியிருக்கும் என்கின்றனர். சமீபத்தில், பல ஆண்டுகால ரகசியத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார் பிரபல மலையாள இயக்குநர் சிபி மலையில்.
1991ம் ஆண்டு கமல்ஹாசன், ரோஷினி, ரேகா, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான குணா திரைப்படத்தை சந்தான பாரதி இயக்கியிருந்தார். ஆனால், அந்த படம் அப்போது வெற்றியடையவில்லை.

குணா படத்தின் மூலம் பிரபலமான இரண்டு விஷயங்கள் அந்த படத்திற்கு இளையராஜா இசையில் வெளியான "கண்மணி அன்போடு காதலன்" பாடலும், குணா குகையும் தான்.
குணா குகை: கொடைக்கானலில் டெவில்ஸ் கிட்சன் என அழைக்கப்படும் ஆழமான பாதாளம் உள்ள குணா குகையை தேடிக் கண்டுபிடித்து கமல்ஹாசன் இந்த இடத்தில் தான் அந்த படத்தை இயக்க வேண்டும் என அந்த காலத்திலேயே துணிச்சலுடன் இயக்கி உள்ளார். அதன் பின்னர் கொடைக்கானலின் பிரபல சுற்றுலா இடமாகவே குணா குகை மாறியது. ஆபத்தான பகுதி என்பதால் அனுமதி மறுக்கப்பட்டு அந்த இடத்திற்கு முன்னதாக இரும்பு கேட் போடப்பட்டு இருக்கும். அந்த இடத்தில் அத்துமீறி ஒரிஜினல் குணா குகையை பார்க்க சென்ற மலையாள நண்பர்களில் ஒருவர் அந்த பள்ளத்தை தாண்டி கடக்க நினைத்த போது கீழே விழுந்து மாட்டிக் கொண்டார். அவரை அவருடன் வந்த நண்பர் உயிரை பணயம் வைத்து மீட்டதை படமாக எடுக்கலாம் என சிதம்பரம் முடிவு செய்து உருவாக்கப்பட்டது தான் இந்த மஞ்சுமெல் பாய்ஸ்.
200 கோடி வசூல்: வெறும் 21 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் உலகளவில் 200 கோடி வசூலை கடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மலையாள திரையுலகின் இண்டஸ்ட்ரி ஹிட்டாக இந்த படம் மாற காரணமே கமல்ஹாசனின் குணா படம் தான். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கமல்ஹாசன் மற்றும் சந்தான பாரதியை சந்தித்து தனது குழுவுடன் சந்திப்பு ஒன்றை கடந்த மாதம் நடத்தியிருந்தார் சிதம்பரம். செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் அந்த படத்தில் நடித்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி வசூலை மஞ்சுமெல் பாய்ஸ் கடந்துள்ளது.

மலையாள இயக்குநர் சிபி மலையில்: முத்தாரம்குன்னு பி.ஓ படத்தின் மூலம் இயக்குநரான பிரபல மலையாள இயக்குநர் சிபி மலையில் மம்மூட்டி, மோகன்லாலை வைத்து பல வெற்றிப் படங்களை மலையாளத்தில் இயக்கியுள்ளார். "குணா படத்திற்கு முன்னதாக ஈழத்துக் கதை ஒன்றை பண்ணுவதற்காக கமல்ஹாசனுடன் என்னுட இணைந்து பயணித்தார், சர்ச்சையை கிளப்பும் படம் என்பதால் அதை டிராப் செய்த கமல்ஹாசன் குணா படத்தை உருவாக்க நினைத்தார்.
குணா படம் மிஸ்ஸான கதை: முதலில் அந்த படத்தை இயக்க என்னை அணுகினார். ஆனால், அந்த நேரத்தில் மோகன்லாலின் பாரதம் படத்தை இயக்கிக் கொண்டிருந்தேன். காஞ்சிபுரத்தில் கடைசி கட்ட பணிகளை செய்யும் போது கமல்ஹாசன் அழைத்த போட்டோஷூட்டுக்கு என்னால் செல்ல முடியவில்லை. அதனால் கமல்ஹாசன் அப்செட் ஆகி விட்டார். அதன் பின்னர், அவருடைய அசோஷியேட் சந்தான பாரதியை வைத்து குணா படத்தை இயக்கினார் என சமீபத்திய பேட்டியில் சிபி மலையில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications