கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்ட நடிகர் சிபி சத்யராஜ்
சென்னை : நடிகர் சிபி சத்யராஜ் ரங்கா, கபடதாரி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்த படங்கள் விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு அடுத்தடுத்து ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்றைய தினம் தனது கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை அவர் போட்டுள்ளார்.

கலக்கல் காமெடி
நடிகர் சிபி சத்யராஜ் சமீபத்தில் சத்யா மற்றும் நாய்கள் ஜாக்கிரதை படங்கள் மூலம் கவனம் பெற்றுள்ளார். சத்யா படத்தில் தனது மெச்சூர்ட்டான நடிப்பை வெளிப்படுத்திய அவர் நாய்கள் ஜாக்கிரதை படத்தில் நாயுடன் மல்லுக்கட்டி காமெடியிலும் கலக்கினார். தொடர்ந்து தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

விரைவில் ரிலீஸ்
தற்போது ரங்கா, கபடதாரி உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார். கொரோனா காரணமாக தள்ளிப் போன இந்த படங்களின் சூட்டிங் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த படங்களின் சூட்டிங் முடிக்கப்பட்டு அடுத்தடுத்து ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் டோசை போட்ட சிபி
இந்நிலையில் இன்றைய தினம் தனது கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை அவர் சென்னையில் போட்டுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், தன்னுடைய கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுள்ளதாகவும் அனைவரும் தடுப்பூசியை போட்டு கொரோனாவை எதிர்த்து போராடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மக்களிடம் விழிப்புணர்வு
கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. திரையுலக பிரபலங்களும் தங்களது கொரோனா தடுப்பூசியை போட்டு தங்களது சார்பில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சிலர் இதுகுறித்த விழிப்புணர்வு வீடியோக்களையும் பகிர்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











