தங்க மெடல் ஜெயித்த சத்யராஜ் பேரன்.. அப்பா சிபிராஜ் செம ஹேப்பி.. சூர்யா மகன் போல தூள் கிளப்புறாரே!
சென்னை: நடிப்பின் நாயகன் சூர்யாவின் மகன் தேவ் கராத்தேவில் இந்த ஆண்டு பிளாக் பெல்ட் வாங்கியதும் அவருடைய அப்பா பெருமைப்பட்டு அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மகனை கொண்டாடிய வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இன்னொரு புறம் சூர்யாவின் மகள் தியாவும் ஆவணப்படம் எல்லாம் இயக்கி அப்பா சூர்யாவுக்கும் அம்மா ஜோதிகாவுக்கும் பெருமைத் தேடி தந்தார். இந்நிலையில், அதே போன்ற பெருமையை சத்யராஜின் பேரனும் சிபிராஜின் மகனும் செய்து அசத்தியிருக்கிறார்.

நடிகர் மாதவனின் மகன் நீச்சல் போட்டியில் தங்க மெடல் வாங்கி குவித்து வரும் நிலையில், டோக்வாண்டோ எனும் தற்காப்பு கலைப் போட்டியில் பங்கேற்று இரு பதக்கங்களை சிபிராஜின் மகன் பெற்றுள்ளதாக பூரிப்புடன் அவரது அப்பா சிபிராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தங்கப்பதக்கம்: சினிமா நடிகர்களின் வாரிசுகள் ஒரு பக்கம் சினிமாவில் ஹீரோவாகவும் இயக்குநராகவும், ஹீரோயின்களாகவும் வந்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் சினிமாவே வேண்டாம் என மற்ற துறைகளில் அவர்கள் சாதனைகளை படைத்து வருவது ரசிகர்களை ரொம்பவே சந்தோஷத்தில் ஆழ்த்தி வருகிறது. நடிகர் சிபிராஜின் மகன் தீரன் கொல்கத்தாவில் நடைபெற்ற 8வது இந்திய TIA OPEN TAEKWONDO CHAMPIONSHIP 2024 போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

2 மெடல்கள்: ஒரு தங்கப்பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப்பதக்கம் என சத்யராஜின் பேரன் 2 மெடல்களை வாங்கி அப்பா, தாத்தா என ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார். அப்பா சத்யராஜ் போலவே தமிழ் சினிமாவில் ஹீரோவாக மாறிய சிபிராஜ் கடந்த 2008ம் ஆண்டு ரேவதி எனும் பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். பள்ளியில் படிப்பில் அதிக ஆர்வம் கொண்டு விளங்கும் மூத்த மகன் தீரன் தற்போது டேக்வாண்டோ எனப்படும் தற்காப்பு பயிற்சியிலும் தூள் கிளப்பியுள்ளார்.
மாயோன் 2வுக்கு வெயிட்டிங்: 2003ம் ஆண்டு வெளியான ஸ்டூடன்ட் நம்பர் ஒன் படத்தின் மூலம் ஹீரோவாக சிபிராஜ் அறிமுகமானார். ஜோர், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், லீ, நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை, கட்டப்பாவ காணோம், சத்யா, வால்டர், கபடதாரி, ரங்கா, மாயோன் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக சிபி நடித்துள்ளார். மாயோன் படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. அதன் 2ம் பாகத்தை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். தாத்தா சத்யராஜ் மிஸ்டர் பரத் படத்துக்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினிகாந்த் உடன் இணைந்து கூலி படத்தில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











