twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவகார்த்திகேயனுக்கு நன்றி சொன்ன சிபி சத்யராஜ்.. அப்படி என்ன செய்தாரு!

    |

    சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இப்போது இருக்கும் இக்கட்டான சூழ்நிலைகளில் கொரோனா தொற்று அதிகமாக காணப்படுவதால் அதற்காக மாத்திரை மற்றும் மருந்துகள் தேவை நாளுக்கு நாள் அதிக அளவில் தேவைப்படுகிறது.

    எனவே நீங்கள் ஒவ்வொரு முறையும் மருந்து மாத்திரைகளை வாங்கும் பொழுதும் காலாவதி தேதியை பார்த்து வாங்குகள் இதை கட்டாயம் கவனியுங்கள் என சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.

    இதனைப் பார்த்த சிபி சத்யராஜ் உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி என கூறியுள்ளார்.

    போல்டான நடிகை என்றால் பைக் ஓட்டணும்.. இதுதான் இந்திய சினிமா.. விழுந்த கதையை சொன்ன ஷ்ரத்தா ஸ்ரீநாத்!போல்டான நடிகை என்றால் பைக் ஓட்டணும்.. இதுதான் இந்திய சினிமா.. விழுந்த கதையை சொன்ன ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

    சூழ்நிலையில்

    சூழ்நிலையில்

    கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்களது ரசிகர்களுக்கு பல்வேறு கோரிக்கைகளையும் அறிவுரைகளையும் கூறி வருகின்றனர்.

    விழிப்புணர்வு

    விழிப்புணர்வு

    முகக்கவசம், கை கழுவுதலின் அவசியம், சமூக இடைவெளி உள்ளிட்டவை குறித்து விதவிதமாக வீடியோக்களை வெளியிட்டு விழிப்புணர்வு பரப்பி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மருந்து மாத்திரை

    மருந்து மாத்திரை

    நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் இந்த இக்கட்டான சமயத்தில் மருந்து மாத்திரை வாங்க செல்பவர்களுக்கு சில அறிவுரைகளை டாக்டர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் என்ற முறையில் வழங்கியுள்ளார். இந்த முக்கியமான அறிவுரைகளை தங்களின் ரசிகர்களும் பயன்பெறும் வகையில் அதை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

    பழைய மருந்துகள்

    பழைய மருந்துகள்

    "லாக்டவுன் காலத்தில் மருந்து கடைகளுக்கு வரவேண்டிய சப்ளை வராமல் இருக்கலாம். வெளியூர்களிலும், வெளிநாடுகளிலிருந்தும் வர வேண்டிய மருந்துகள் லாக்டவுனால் மருந்துக் கடைக்கு வந்து சேர முடியாது. அதனால் சில மருந்து கடைகளில் பழைய மருந்துகள் இருப்பு இருக்கலாம்.

    கவனமாக வாங்கவும்

    கவனமாக வாங்கவும்

    மக்கள் அனைவரும் இந்த நேரத்தில் வாங்கும் மருந்துகளின் காலாவதி தேதியை கவனமாக பார்த்து பின்னரே வாங்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகளுக்கு வாங்கும் பால் பவுடர், க்ரீன், ஷாம்பூ, பேபி ஆயில் போன்ற அனைத்து பொருட்களின் காலாவதி தேதியை பார்த்து வாங்குவது மிக மிக அவசியம். காலாவதியான மருந்துகளை உபயோகிப்பதால் உடலில் பல உபாதைகள் வரலாம்.

    டிஸ்போஸ் செய்யுங்கள்

    டிஸ்போஸ் செய்யுங்கள்

    மருந்து கடை வைத்திருப்பவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். மக்கள் அனைவரும் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்து வைத்த காசில்தான் மருந்து வாங்க வருகிறார்கள். அவர்கள் வாங்கும் மருந்து அவர்களை குணப்படுத்தும் என்ற நம்பிக்கையில் தான் வாங்குகிறார்கள். தயவு செய்து உங்கள் கடைகளில் காலாவதியான மருந்துகளை டிஸ்போஸ் செய்ய ஒரு சிஸ்டம் அமைக்க வேண்டும்'' என மக்களுக்கு தனது அறிவுரையை டாக்டர் திவ்யா சத்யராஜ் வழங்கியிருக்கிறார்

    ஷேர் செய்யுங்கள்

    ஷேர் செய்யுங்கள்

    இதை பார்த்த சிவகார்த்திகேயன் யாரெல்லாம் மருந்துகள் வாங்குவீர்களோ உங்களுக்கு இது ஒரு ரொம்ப முக்கியமான விழிப்புணர்வு ஊட்டச்சத்து நிபுணரும் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா கூறியுள்ள முக்கியமான விஷயங்களை படியுங்கள், என்னைப் போன்று உங்களுக்கும் இது முக்கியமான ஒரு செய்தி என தோன்றினால் நீங்களும் ஷேர் செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

    சிபி சத்யராஜ் நன்றி

    சிபி சத்யராஜ் நன்றி

    சிவகார்த்திகேயனின் இந்த ட்விட் பதிவை பார்த்த நடிகர் சிபி சத்யராஜ், நீங்கள் இது போன்ற சில சமூக அக்கறை உள்ள விஷயங்களில் தொடர்ந்து உங்களது ஆதரவு தெரிவித்து வருவதற்கு மிக்க நன்றி என தங்கையின் விழிப்புணர்வு பதிவிற்கு ஆதரவு தெரிவித்த சிவகார்த்திகேயனுக்கு நன்றிகளை ட்விட்டரில் மூலம் தெரிவித்துள்ளார்.

    English summary
    Sibi Sathyaraj thanks for Sivakarthikeyan's continued support
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X