Don't Miss!
- Finance
ஊழியர்கள் சம்பளத்தை இரட்டிப்பாக்கும் மைக்ரோசாப்ட்.. என்ன காரணம்?
- News
ப.சிதம்பரம் திகார் சிறைக்கு செல்ல வாய்ப்பு! கார்த்தி சிதம்பரத்திற்கு ஆபத்தில்லை..! ஹெச்.ராஜா அதிரடி!
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சத்யராஜ் இப்போ எப்படி இருக்கிறார்... மகன் சிபி வெளியிட்ட ஹாட் அப்டேட்
சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் சத்யராஜ் தற்போது எப்படி இருக்கிறார் என அவரது மகன் சிபி சத்யராஜ் ட்விட்டரில் அப்டேட் பதிவிட்டுள்ளார்.
1980 களில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் சத்யராஜ். ஆரம்பத்தில் வில்லன் ரோல்களில் நடித்து, பிறகு ஹீரோவாக அறிமுகமானவர். இரண்டு ஹீரோக்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் சத்யராஜ். கடலோர கவிதைகள் துவங்கி பல ஹிட் படங்களில் சத்யராஜ் நடித்துள்ளார்.
சிம்பு எனும் உணர்ச்சி நாயகன்...சுவராஸ்ய தகவல்கள்

பேச வைத்த கட்டப்பா
வயதான பிறகு கேரக்டர் ரோல்களில் நடிக்க துவங்கினார். ஹீரோக்களுக்கு அப்பாவாக நடித்து வந்த சத்யராஜ், எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பாகுபலி படத்தில் கட்டப்பா ரோலில் நடித்து மிகவும் பிரபலமாகி விட்டார். இது வரை சத்யராஜ் நடித்த ரோல்கள் அனைத்தையும் தூக்கி சாப்பிட்டு, மிகப் பெரிய பெயரை பாகுபலி அவருக்கு பெற்று தந்தது.

சத்யராஜிற்கு கொரோனா
தற்போதும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட பல படங்களில் சத்யராஜ் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடுமையான அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சத்யராஜ் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

டிஸ்சார்ஜ் ஆனார் சத்யராஜ்
இந்நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ள சத்யராஜ் நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடு திரும்பியதாக அவரது மகன் சிபி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அப்பா நன்றாக உள்ளார். முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டார் விரைவில் அவர் வழக்கமான பணிகளை துவங்குவார் என குறிப்பிட்டுள்ளார்.

கட்டப்பா மீண்டு வந்தார்
இதை கேட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். சத்யராஜை நன்றாக கவனித்துக் கொள்ளும்படி சிபியிடம் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். பெரும்பாலானவர்கள் கட்டப்பா மீண்டு வந்து விட்டார் என கமெண்ட் செய்துள்ளனர்.