CM விஜய்யை சந்தித்த சத்யராஜ் மகன்.. ஒரே பூரிப்பா இருக்காருப்பா சிபிராஜ்
சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சராக நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பதவியேற்றதில் இருந்து, திரையுலகினர் பலரும் அவரது நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகரும் நடிகர் சத்யராஜின் மகனுமான சிபிராஜ் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்தார்.
சிபிராஜ் விஜய்யின் தீவிர ரசிகர் என்றாலும், அவரது தவெகவுக்கு தீவிர ஆதரவாளர். குறிப்பாக அவரது அப்பாவும் சகோதரியும் தீவிரமான திமுக ஆதரவாளர்கள் எனும் போதும், விஜய் குறித்து காட்டமான விமர்சனங்களை முன் வைத்த போதும், விஜய்க்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். அதுவும் தனது அப்பாவின் மேடைப் பேச்சுகளுக்கு கூட, தனது சமூக வலைதள பக்கத்தில் பதிலடி கொடுத்து வந்தார்.
குறிப்பாக விஜய் குறித்து அவர் எழுதியது சில ரசிகர்களை கவர்ந்தது, எனலாம், " 1993 அக்டோபர் 3 ஆம் தேதி பொள்ளாச்சி சக்தி ஹோட்டலில் அப்பாவின் பிறந்தநாள் விழாவில், எஸ்.ஏ. சந்திரசேகர் சார், கேப்டன் விஜயகாந்த் அங்கிளுடன் நீங்கள் வந்திருந்தபோது தான் நான் முதன் முதலில் உங்களை சந்தித்தேன். அப்போது அந்த எளிமையான இளைஞன், எதிர்காலத்தில் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்று ஒரு பெரிய சக்தியாக மாறுவார் என்று எனக்கே தெரியாது
விஜய் இனி நடிக்க போவதில்லை என்ற செய்தியை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், "ஒரு ரசிகராகவும், நடிகராகவும், சகோதரராகவும், நண்பராகவும், நீங்கள் எடுத்துள்ள புதிய பாதையை நான் மதிக்கிறேன். எப்போதும் உங்களுடன் நின்று கொண்டே இருப்பேன்" என்று பதிவிட்டிருந்தார்.

எவராலும் விஜய் ஆக முடியாது: அதேபோல் தேர்தல் முடிவுகள் வந்ததுமே, ""கூட்டம் ஒட்டா மாறாது"
-மாறிடுச்சு!
"ஒட்டு சீட்டா மாறாது "
-மாறிடுச்சு!
"நடிகன் நாடாள முடியாது"
-ஆளப்போகிறார்
"அவர் திரும்ப நடிக்க போய் விடுவார் "
-வாய்ப்பில்லை ராஜா
"அவருக்கு அரசியல பத்தி என்ன தெரியும் ?"
-பாக்க தானே போறீங்க
"விஜய் இவராக முடியாது...விஜய் அவராக முடியாது"..
-எவராலும் விஜய் ஆக முடியாது" என்றும் பதிவிட்டிருந்தார்.
முதலமைச்சரைச் சந்தித்த சிபிராஜ்: இப்படி இருக்கையில் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்யை நடிகர் சிபிராஜ் சந்தித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், " நமது முதலமைச்சரைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. 2026 தேர்தலில் அவர் பெற்ற மாபெரும் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்க இன்று அண்ணாவை சந்தித்தேன். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக அவரை எனக்குத் தெரியும். அவருடைய பணிவு, அன்பு மற்றும் எளிமை ஆகியவை இத்தனை ஆண்டுகளாக மாறாமல் அப்படியே இருக்கின்றன என்று என்னால் பெருமையுடன் கூற முடியும். அவருக்கு நல்ல ஆரோக்கியம், தொடர் வெற்றி மற்றும் நமது மாநிலத்திற்கு ஒரு ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன். அன்புள்ள அண்ணா, உங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications