twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிபிராஜ் நடிக்கும் கபடதாரி… நவம்பரில் ஸ்டார்ட் மார்ச்சில் ரிலீஸ்

    |

    சென்னை: நடிகர் சிபிராஜ் நடிக்கும் படத்திற்கு கபடதாரி என்று பெயரிடப்பட்டுள்ளது. சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லராக உருவாகும் படத்திற்கு இதுவரை பெயர் சூட்டப்படாமல் இருந்தது. தற்போது பெயர் சூட்டப்பட்டுள்ளது. படப்பிடிப்பை வரும் நவம்பரில் தொடங்கி 2020ஆம் ஆண்டு மார்ச்சில் உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    கிரியேட்டிவ் என்டர்டெயின்மெண்ட் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வழங்கும் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நாயகனாக நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லராக உருவாகும் படத்திற்கு இதுவரை பெயர் சூட்டப்படாமல் இருந்தது.

    Sibiraj Nandita Swetha Acts New Thriller Film Kabadathari

    தற்போது அப்படத்திற்கு கபடதாரி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கபடதாரி என்றால் பாசாங்குக்காரன், வேஷக்காரன், நம்பவைத்து கழுத்தறுப்பவன் என்று பொருள். இப்படத்தில், சிபிராஜுடன் நாசரும் நடிப்பதாக முடிவாகிவிட்ட நிலையில், சமீபத்தில் சிபிராஜ் ஜோடியாக நடிப்பதற்கு நந்திதா ஸ்வேதா ஒப்பந்தமாகியிருந்தார்.

    இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், ஜே.சதிஷ் குமார், மயில்சாமி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சிபிராஜ் இதுவரை தான் ஏற்று நடித்த கதா பாத்திரங்களை விட, இந்தப் படத்தில் முக்கியமான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கும் என்கிறார் இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் Dr. கோ. தனஞ்செயன்.

    Sibiraj Nandita Swetha Acts New Thriller Film Kabadathari

    லலிதா தனஞ்செயன் படத்தைத் தயாரிக்க, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். கதையை எம்.ஹேமந்த் ராவ் எழுத, திரைக்கதையையும் வசனங்களையும் இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனும், Dr.கோ.தனஞ்செயனும் ஏற்கிறார்கள். கலை இயக்குநராக விதேஷ் பணியாற்ற, சில்வா சண்டை காட்சிகளை அமைக்க, பிரவீன் கே.எல். படத்தொகுப்பு பணியைச் செய்கிறார்.

    சைமன்.கே.கிங் இசையமைக்க, பாடல்களை வைரமுத்து மற்றும் கு.கார்த்திக் எழுதுகிறார்கள். ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். வணிகத்திற்கு எஸ்.சரவணன் தலைமையேற்க, நிர்வாக தயாரிப்பு பணியை என்.சுப்பிரமணியன் கவனிக்கிறார்.

    இதுதான் ரியல் ஃபேன் வார்.. கைதிக்கு டிக்கெட் போடும் அஜித் ரசிகர்கள்!இதுதான் ரியல் ஃபேன் வார்.. கைதிக்கு டிக்கெட் போடும் அஜித் ரசிகர்கள்!

    இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 1ஆம் தேதி துவங்குகிறது. சென்னை மற்றும் ஹைதராபாத் நகரத்தின் முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தவுள்ளார்கள். ஒரே கட்டமாக முழுவீச்சில் நடைபெற்று, மார்ச் 2020ல் உலகம் முழுவதும் திரையிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

    English summary
    The film, starring actor Sibiraj, has been titled 'Kapadathari'. The film is yet to be named as suspense, emotional thriller. Currently named. Filming is scheduled to be released worldwide in March 2020, beginning in November.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X